இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகும் தகுதி இவங்க 2 பேர்கிட்ட இருக்கு – ஸ்டீவ் ஸ்மித் ஓபன்டாக்

Smith
- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி பிசிசிஐ மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் தனது டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அவரது இந்த கேப்டன் பதவி ராஜினாமாவிற்கு பின்னர் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தாலும் கோலியின் முடிவை மதித்து அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயம் காரணமாக கோலி விளையாடாததால் இரண்டாவது போட்டியில் கே.எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

ஆனாலும் ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்க தொடரில் காயம் காரணமாக இடம் பெறாததால் மீண்டும் அவர் அணிக்கு திரும்பும் போது டெஸ்ட் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதேபோன்று இளம் வீரரான ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு தகுதியான 2 வீரர்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரரான ஸ்டீவ் ஸ்மித் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : முதலில் நான் விராட் கோலிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்திய அணியை கடந்த 6-7 ஆண்டுகளாக அவர் சிறப்பாக நடத்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இந்திய அணியை வழிநடத்திய விதம் அபாரமான ஒன்று. தற்போது உள்ள இந்திய அணியில் என்னைப்பொறுத்தவரை ரோஹித் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருக்கு டெஸ்ட் அணியை வழிநடத்தும் தகுதி உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கும் இந்திய அணியின் கேப்டனாகும் ஆசை இருக்கு. பும்ராவிற்கு அடுத்து விருப்பத்தை தெரிவித்த – பவுலர்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியை விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரது அந்த சுவடினை பின்பற்றி நிச்சயம் அடுத்து வரும் கேப்டனும் இந்திய அணியை அற்புதமாக கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஸ்மித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement