வெற்றி கைக்கு அருகில் வந்தபோது வில்லனாக மாறிய 9 கோடி ஆல்ரவுண்டர் – சி.எஸ்.கே தோக்க இவரே காரணம்

Gowtham-1
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான 50வது லீக் போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்று முடிவு பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 55 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மற்ற யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை.

cskvsdc
cskvsdc

இதனைத்தொடர்ந்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடியது. ப்ரித்வி ஷா 18 ரன்களும், ஷிகர் தவான் 39 ரன்களும் குவித்தனர். இவர்கள் கொடுத்தது சிறப்பான துவக்கம் என்றாலும் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து டெல்லி அணியின் விக்கெட்டுகள் சரிந்தது.

- Advertisement -

பின்னர் இறுதியில் கடைசி ஓவருக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரில் பிராவோ ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தாலும் இரண்டு வொய்டு மற்றும் ஒரு பவுண்டரி ஆகியவை வந்ததால் டெல்லி அணி 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சப்ஸ்ட்டியூட் வீரராக வந்த கிருஷ்ணப்பா கௌதம் ஹெட்மையர்-இன் முக்கியமான கேட்சை ஆட்டத்தின் முக்கியமான இடத்தில் தவறவிட்டார்.

gowtham

அதாவது போட்டியில் 19வது ஓவரில் ஹெட்மையர் கொடுத்த கேட்சை கிருஷ்ணப்பா கவுதம் தவறவிட்டார். அந்த கேட்சை பிடித்து இருந்தால் நிச்சயம் இறுதி ஓவரில் போட்டி மாறி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஹெட்மயரை தவிர மற்ற அனைவரும் பந்துவீச்சாளர்கள் என்பதனால் அவரின் விக்கெட் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தனக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர் இறுதிவரை களத்தில் இருந்து போட்டியை முடித்துக் கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஈஸியா முடியவேண்டியது. ஒரு மாதிரி போயி லாஸ்ட்டா ஜெயிச்சிட்டோம் – ரிஷப் பண்ட் பேட்டி

எனவே சிஎஸ்கே ரசிகர்கள் தற்போது கிருஷ்ணப்பா கவுதம் மீது சற்று அதிரப்தி அடைந்துள்ளனர். ஏனெனில் 9 கோடி கொடுத்து கடந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை என்பதும் அதேபோன்று முக்கியமான நேரத்தில் எளிதான கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டு கைக்கு அருகில் வந்த வெற்றியை அவர் டெல்லி அணிக்கு கொடுத்ததும் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement