ஈஸியா முடியவேண்டியது. ஒரு மாதிரி போயி லாஸ்ட்டா ஜெயிச்சிட்டோம் – ரிஷப் பண்ட் பேட்டி

pant
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணியானது டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சின் காரணமாக எந்த ஒரு கட்டத்திலும் அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ராயுடு 55 ரன்கள் குவித்தார்.

dcvscsk
dcvscsk

அதனைத் தொடர்ந்து 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அது அதிரடியான ஆட்டத்தினால் சிறப்பான துவக்கத்தை கண்டது. பிரித்வி ஷா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற தவான் 39 ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களிலும், ரிஷப் பண்ட் 15 ரன்களிலும், ரிப்பல் பட்டேல் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இறுதி நேரத்தில் சற்று பதட்டம் ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது களமிறங்கிய அஸ்வினும் 2 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் போட்டி சற்று பரபரப்பாக மாறியது. ஏழாவது வீரராக களமிறங்கிய ஹெட்மையர் 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 28 ரன்கள் குவிக்க டெல்லி அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இறுதியில் 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது மட்டுமின்றி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

dc

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்த போட்டி கடினமான போட்டியாகவே அமைந்தது. ஈசியாக இருந்த போட்டியை நாங்களே கடினமாக மாற்றிக்கொண்டோம். இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இந்த போட்டியின்போது பவர் பிளே ஓவர்களில் நாங்கள் ரன்களை கொடுத்தாலும் அதன் பிறகு சிறப்பாக பந்து வீசினோம். பின்னர் இறுதி நேரத்தில் சிஎஸ்கே வீரர்கள் சற்று அதிகமான ரன்களை குவித்தனர்.

- Advertisement -
hetmyer
hetmyer DC

ஆனால் பேட்டிங்கின்போது நாங்கள் சிறப்பாக துவங்கியதாகவே நினைக்கிறோம். இது போன்ற லோ ஸ்கோரை துரத்தும்போது ஓபனிங் என்பது மிகவும் அவசியம். அந்த வகையில் ப்ரித்வி ஷா சிறப்பான துவக்கத்தை அளித்து ஆட்டமிழந்தார். அதே போன்று தவானும் தன்னுடைய பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து விட்டு சென்றார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : ஹார்டிக் பாண்டியா இடத்தை நிரப்ப காத்திருக்கும் 4 வீரர்கள் – லிஸ்ட் இதோ

மிடில் ஓவர்களில் நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதியில் ஹெட்மையர் எங்களுக்காக போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியான ஒன்று மேலும் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி தற்போது முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சி என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement