டி20 உலகக்கோப்பை : ஹார்டிக் பாண்டியா இடத்தை நிரப்ப காத்திருக்கும் 4 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Pandya
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா முதுகு பகுதியில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து பந்துவீசாமல் அணியில் நீடித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் பந்து வீசாமல் உள்ளதால் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் எப்படி விளையாடப் போகிறார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஆல்ரவுண்டரான அவர் பந்துவீசும் பட்சத்தில் தான் அணியில் நீடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை ஹார்டிக் பாண்டியா பந்து வீசாமல் இருந்துவருகிறார். என்னதான் பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடினாலும் நிச்சயம் பவுலிங்கில் அவர் கைகொடுக்கும் பட்சத்திலேயே அணியில் நீடிப்பார் என்று அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

pandya 2

- Advertisement -

கடந்த மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் பங்கேற்ற பாண்டியா சில ஓவர்கள் பந்து வீசினார். ஆனால் அப்போதும் அவர் அசௌகரியத்தை உணர்ந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவர் பந்து வீசாததால் நிச்சயம் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இருந்தாலும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. இந்நிலையில் அவருக்கு பதிலாக அவரது இடத்தை நிரப்ப காத்திருக்கும் நான்கு வீரர்கள் பற்றிய பட்டியலை நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த லிஸ்ட் இதோ :

ஷர்துல் தாகூர் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் தற்போதைய உலக கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர் பேட்டிங்கிலும் 3 இன்னிங்ஸ்களில் 117 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதால் அவரை ஒரு பேக் அப் வீரராக கருதலாம். ஏனெனில் அவரிடம் அபாரமான பேட்டிங் திறன் உள்ளதை நாம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

Thakur

க்ருனால் பாண்டியா : இந்திய அணியின் டி20 போட்டிகளில் ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த க்ருனால் பாண்டியா இம்முறை உலகக் கோப்பை அணிக்கான பட்டியலில் இடம்பெறவில்லை. இருப்பினும் சுழற்பந்து வீச்சாளரான இவர் பின்வரிசையில் இறங்கி அதிரடியாக விளையாட கூடியவர் என்பதால் அவரையும் ஒரு பேக்அப் வீரராக கருதலாம்.

- Advertisement -

Krunal

ஹர்ஷல் படேல் : தற்போதைய நடப்பு ஐ.பி.எல் தொடரில் 26 விக்கெட்டுகள் உடன் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளராக திகழும் இவர் ஓரளவு பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக் கூடியவர் என்பதால் இவரும் பாண்டியாவின் இடத்திற்கு ஒரு மாற்று வீரராக கருதலாம்.

இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னா நேற்றைய போட்டியில் விளையாடாததன் காரணம் இதுதான் – தோனி கொடுத்த விளக்கம்

தீபக் சாஹர் : பவர்பிளே ஓவர்களில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் இவர் டி20 கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளை கூட ஒரே போட்டியில் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போதைய சிஎஸ்கே அணியில் துவக்க ஓவர்கள் சிறப்பாக பந்து வீசி வரும் இவர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement