பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிரா ரோஹித் தாங்க மாட்டாரு, அவர ஓப்பனிங்ல இறக்கி விடுங்க – ஸ்ரீகாந்த் தடாலடி பேட்டி

Srikkanth 2
- Advertisement -

அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகுவதற்கு உதவும் 2023 ஆசிய கிரிக்கெட் கோப்பை ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கியது. அதில் தங்களுடைய சொந்த மண்ணில் நேபாளை முதல் போட்டியில் துவம்சம் செய்த பாகிஸ்தான் மிகப்பெரிய வெற்றி பெற்று குரூப் ஏ புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் அந்த அணி அடுத்ததாக பரம எதிரி இந்தியாவை செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் எதிர்கொள்ள உள்ளது.

இவ்விரு அணிகளை பொறுத்த வரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சு துறையில் பலமான அணியாகவும் இந்தியா பேட்டிங் துறையில் பலமான அணியாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து நேரடியாக களமிறங்குவதும் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் மீண்டும் காயமடைந்து வெளியேறியுள்ளதும் இந்திய பேட்டிங் வரிசையின் மிடில் ஆர்டரை பலவீனப்படுத்தியுள்ளது. இந்த நிலைமையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இஷான் கிசான் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஸ்ரீகாந்த் கோரிக்கை:
ஆனால் பெரும்பாலும் தொடக்க வீரராக களமிறங்கி கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் இரட்டை சதமடித்து சாதனை இப்போட்டியில் சம்பந்தமின்றி மிடில் ஆர்டரில் விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷாஹின் அப்ரிடி போன்ற தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக புதிய ஸ்விங் பந்துகளில் ரோகித் சர்மா தாக்குப்பிடிப்பது கடினம் என்று தெரிவிக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசாமல் இசான் கிசான் துவக்க வீரராக களமிறங்கலாம் என்று அதிரடியாக பேசியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“கேஎல் ராகுல் ஃபிட்டாக இல்லாமல் போகும் பட்சத்தில் கில்லுடன் இஷான் கிசான் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். ஏனெனில் அவர் பெரும்பாலும் ஓப்பனிங் இடத்தில் வெற்றிகரமாக விளையாடி தான் சாதனைகள் படைத்துள்ளார். அதனால் ரோஹித் சர்மா கேப்டனாக தன்னுடைய இடத்தை தியாகம் செய்து 4வது இடத்தில் விளையாடலாம். சொல்லப்போனால் புதிய பந்தில் ஸ்விங் செய்து நெருப்பாக பந்து வீசும் பாகிஸ்தான் அட்டாக்கிற்கு எதிராக ரோகித் சர்மா ஈசியாக அவுட்டாகி விடுவார்”

- Advertisement -

“எனவே இஷான் கிசான் விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். காரணம் பாகிஸ்தான் அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அந்த பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு சமாளிப்பதற்கான முழு சுதந்திரத்தையும் நீங்கள் இசான் கிசானுக்கு கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: இது இந்திய அணிக்கு கெட்ட செய்தி, இனியும் அவர் விளையாடுவார்ன்னு என்ன கேரண்டி – நட்சத்திர இந்திய வீரர் மீது கைப் அதிருப்தி

“மேலும் இடது – வலது கை ஓப்பனிங் கலவை ஜோடியை உருவாக்குவதற்காக நான் இசான் கிசானை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற தைரியமான முடிவை சொல்கிறேன்” என்று கூறினார். முன்னதாக ஐபிஎல் தொடரின் போது சொதப்பிய ரோகித் சர்மாவை நோஹிட் சர்மா என்று ஸ்ரீகாந்த் வெளிப்படையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement