வெறும் 10 ரன் மட்டுமே அடிச்ச அவருக்கு எதுக்கு வேர்ல்டுகப்ல சேன்ஸ் குடுத்தீங்க – கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டம்

Srikkanth
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு 2023-ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரானது பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகளுடன் அமைந்துள்ளதால் இந்த தொடரில் வெற்றி பெறப்போவது எந்த அணி? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் தற்போதே அதிகரித்துள்ளது. அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கி நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்து தொடரானது தற்போதே அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் வெளியிட்டனர். இந்த அணியில் மொத்தம் 15 வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு அவர்களே உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணிகள் இடம் பெற்றுள்ள ஒரு சில வீரர்களின் தேர்வு குறித்து சில விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியில் ஷர்துல் தாகூரை தேர்வு செய்தது ஏன்? என முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் ஷர்துல் தாகூரை ஒரு முழு ஆல்ரவுண்டராக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் சமீப காலத்தில் மொத்தம் 10 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அது தவிர எத்தனை போட்டியில் அவர் 10 ஓவர்களையும் முழுவதுமாக வீசி இருக்கிறார் என்று தெரியவில்லை.

- Advertisement -

எப்பொழுதுமே ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தனது 10 ஓவர்களையும் பெரிய அளவில் நிறைவு செய்ததில்லை. அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் எட்டாவது இடத்தில் களமிறங்கி விளையாடும் அவரை ஒரு ஆல்ரவுண்டராக ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஒரு ஆல்ரவுண்டருடன் செல்ல வேண்டுமென்றால் அக்சர் பட்டேலுடன் செல்லலாம். அவர் ஒரு முழுமையான ஆல்ரவுண்டர் என்று ஏற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : உங்கள இந்திய ரசிகர்கள் கூட திட்டாம இருக்க மாட்டாங்க – ஜெய் ஷா பற்றி கடுமையாக விமர்சித்த கம்ரான் அக்மல்

ஆனால் ஷர்துல் தாகூரை அணியில் சேர்த்தது எதற்கு? என ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளையில் இந்திய அணியின் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யும் ஒரு பவுலர் வேண்டும் என்பதற்காகவே அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement