உங்கள இந்திய ரசிகர்கள் கூட திட்டாம இருக்க மாட்டாங்க – ஜெய் ஷா பற்றி கடுமையாக விமர்சித்த கம்ரான் அக்மல்

Kamran Akmal 5
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த லீக் சுற்றின் முடிவில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் எந்த வெற்றியும் பதிவு செய்யாமல் ஆரம்பத்திலேயே வெளியேறியுள்ளன. மறுபுறம் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நடப்பு சாம்பியன் இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து ஃபைனலுக்கு தகுதி பெறப்போகும் 2 அணிகளை தீர்மானிக்கும் முக்கியமான சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 6ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது.

இருப்பினும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மோதும் அந்த போட்டியை தவிர்த்து எஞ்சிய 5 சூப்பர் 4 போட்டிகள் இலங்கையில் இருக்கும் கொழும்பு நகரில் நடைபெற உள்ளது. இருப்பினும் இதுவரை பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டிகள் எவ்விதமான தடையும் இல்லாமல் முழுமையாக நடைபெற்ற நிலையில் இலங்கையில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மழை வந்து குறுக்கிடுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

- Advertisement -

இந்திய ரசிகர்களே திட்டுவாங்க:
குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அனல் பறந்த தருணங்களுக்கு பின் பாதியிலேயே மழையால் ரத்து செய்யப்பட்டது அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதனால் இலங்கையில் தற்போது மழை காலம் என்று தெரிந்தும் இத்தொடரின் பெரும்பாலான போட்டிகளை அங்கு நடத்துவதற்கான முடிவை எடுத்த ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா’வை நிறைய பேர் விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக பாகிஸ்தானில் 2008க்குப்பின் முழுமையாக நடைபெறவிருந்த இத்தொடரை அரசியல் செய்து ஜெய் ஷா மாற்றியதற்கு மழை தண்டனை கொடுத்து வருவதாக அந்நாட்டை சேர்ந்தவர்கள் கோபமாக பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள கம்ரான் அக்மல் தரமான போட்டிகளை முழுமையாக பார்க்க விடாமல் செய்து பலரது நெஞ்சங்களை உடைத்த ஜெய் ஷா’வை இந்திய ரசிகர்களே திட்டி விமர்சிப்பார்கள் என்று கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான போட்டியில் மழையால் நிச்சயமாக தடை பெறுவது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக அங்கு என்ன வானிலை நிலவும் என்பது நமக்கு தெரியும். ஒருவேளை அங்கு நடைபெறும் போட்டிகள் மாற்றப்படவில்லையெனில் அது பல மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தும். அந்த இழப்பு மிகப்பெரியதாக இருக்கும். இதற்கு சிலரின் ஈகோ தான் முக்கிய காரணமாகும். இது இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்ப்பதற்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களையும் உடைக்கிறது”

இதையும் படிங்க: அவர மாதிரி பிளேயர் இனி உலகத்துல பிறக்க போறதில்ல, ட்ராவிட் எங்கிட்ட தடுமாறுவாரு – இந்திய ஜாம்பவானை பாராட்டிய முரளிதரன்

“குறிப்பாக நாங்கள் விரும்பும் போட்டிகளை பார்க்க முடியாமல் போனால் இந்திய ரசிகர்களே ஏமாற்றம்டைவார்கள். அதனால் அவர்கள் ஜெய் ஷா’வை விமர்சிக்கவும் செய்வார்கள். ஒருவேளை கிரிக்கெட்டுக்கு மட்டும் மதிப்பு கொடுத்து அரசியலை வெளியே வைத்து விட்டு இத்தொடரை பாகிஸ்தானில் முழுமையாக நடத்துவதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருந்தால் ஆசிய கோப்பை மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும்” என்று கூறினார்.

Advertisement