- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தப்பை ஒத்துக்கோங்க அதை விட்டுட்டு அவரை இன்சல்ட் பண்ணாதீங்க.. கம்பீர், அபிஷேக் நாயரை விளாசிய ஸ்ரீகாந்த்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இத்தனைக்கும் அந்த 2 போட்டிகளிலும் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் விராட் கோலி உள்ளிட்ட மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

முன்னதாக இந்த தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோரின் பேட்டிங் வரிசையை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மாற்றியது முக்கிய காரணமானது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ், ராகுல் ஆகியோர் 4, 5வது இடங்களில் விளையாடி பெரிய ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினர். ஆனால் அப்படிப்பட்ட அனுபவமிக்க அவர்களை இத்தொடரில் கம்பீர் 6, 7வது களமிறக்கியது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

ஸ்ரீகாந்த் விளாசல்:
குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 2/3 என இந்தியா தடுமாறியது. அப்போது விராட் கோலியுடன் சேர்ந்து 5வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் அப்படிப்பட்ட அவரை 2வது போட்டியில் கம்பீர் 7வது இடத்தில் களமிறங்கினார்.

இருப்பினும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்பதற்காக கம்பீர் எடுத்த அந்த முடிவு சரிதான் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கேஎல் ராகுல் போன்ற கிளாஸ் நிறைந்தவரை 7வது இடத்தில் களமிறக்கி கம்பீர் இன்சல்ட் செய்துள்ளதாக முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அதை ஆதரித்த அபிஷேக் நாயரையும் விளாசியுள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரரை அவமானம் செய்கிறீர்கள். ஆனால் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்பதற்காக இப்படி செய்தோம் என்று அபிஷேக் நாயர் அந்த முடிவை நியாயப்படுத்தி பேசுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த இடது வலது கை பேட்ஸ்மேன்கள் என்பது புடலங்காய் போன்றது. இதெல்லாம் தோல்வியை சந்தித்த பின் ஏதோ ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக கூறுகிறார்கள்”

இதையும் படிங்க: அதுக்கு தயாராக பெரிய சான்ஸ் கிடைச்சுருக்கு.. கம்பீர் எங்களுக்கு திட்டம் சொல்லிருக்காரு.. வாஷிங்டன் சுந்தர் பேட்டி

“தவறு செய்து தோல்வியை சந்தித்தால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுங்கள். கேஎல் ராகுலை 7வது இடத்திலா களறக்குவீர்கள்? அந்த வெறுப்பிலேயே அவர் அவுட்டானார் என்று நினைக்கிறேன். 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அவரும் விராட் கோலியும் தான் சேர்ந்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். ராகுல் மிகவும் கிளாஸ் நிறைந்த வீரர்” என்று கூறினார்.

- Advertisement -