ஆசிய கோப்பைன்னா இளக்காரமா, ஃபிட்டாக இல்லாத அவர ஏன் செலக்ட் பண்ணீங்க? – அஜித் அகர்கரை விளாசிய ஸ்ரீகாந்த்

- Advertisement -

வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகி இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வாகியுள்ளனர். அதனால் உலகக் கோப்பையில் நம்பர் 4வது இடத்தில் விளையாடும் வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆகியோர் பற்றி நிலவி வந்த பிரச்சனைகளும் குழப்பங்களும் தீர்ந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

KL rahul Shreyas Iyer

- Advertisement -

இருப்பினும் இந்த தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் நேரடியாக தேர்வாகியுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் கண்துடைப்புக்காக பேக்-அப் வீரராக மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது நிறைய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதை விட விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் கேஎல் ராகுல் ஏற்கனவே சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சிகளை மேற்கொண்ட போது மீண்டும் லேசான காயத்தை சந்தித்துள்ளதால் 2023 ஆசிய கோப்பையின் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் விளாசல்:
மேலும் அந்த நிலைமையை சமாளிப்பதற்காகவே சஞ்சு சாம்சன் பேக்-அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்திய அவர் உலகக்கோப்பைக்கு முன் ராகுல் குணமடைந்து விடுவார் என்று நம்புவதாக கூறியிருந்தார். இந்நிலையில் 100% முழுமையாக ஃபிட்டாகாத ராகுலை வலுக்கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன என 2011 உலகக்கோப்பையை வென்ற அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.

Rahul

குறிப்பாக உலகக்கோப்பைக்கு நிகரான ஆசிய கோப்பையில் வெற்றி பெறுவது முக்கியமில்லையா என்று கேள்வி எழுப்பும் அவர் இதே போன்ற நிலைமையில் ஒரு முறை விவிஎஸ் லக்ஷ்மன் கடைசி வரை குணமடையாமல் வெளியேறிய தருணத்தை சுட்டிக்காட்டி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் லேசான காயத்தை சந்தித்துள்ளார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் காயத்தை சந்தித்துள்ளார் என்றால் பின்னர் ஏன் தேர்வு செய்கிறீர்கள்? பொதுவாக தேர்வு செய்யும் சமயத்தில் வீரர்கள் ஃபிட்டாக இல்லாத பட்சத்தில் நீங்கள் அவர்களை தேர்வு செய்யக்கூடாது”

- Advertisement -

“அது தான் நம்முடைய கொள்கையாகும். எனவே வேண்டுமானால் உலகக் கோப்பையில் அவர் முழுமையாக குணமடைந்து விட்டால் தேர்வு செய்யலாம். ஆனால் தற்போது அவர்கள் ஆசிய கோப்பையின் ஒரு சில போட்டிகளில் ராகுல் விளையாட மாட்டார் என்றும் இந்த நிலைமையை சரி செய்வதற்காகவே சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள். என்ன இது? நீங்கள் தற்போது விளையாடப் போகும் ஆசிய கோப்பையும் ஒரு பிரீமியர் தொடராகும். அதில் கடந்த 2 தொடர்களாக நாம் ஃபைனலுக்கு தகுதி பெறவில்லை”

Kris Srikkanth

“எனவே ஆசிய கோப்பையின் முக்கியத்துவமாக கருதி நீங்கள் அதில் சிறப்பாக செயல்பட்டு ஃபைனலுக்கு தகுதி பெற வேண்டும். ஆனால் அவர்கள் இன்னும் உலகக்கோப்பை அணியில் குழப்பத்தைக் கொண்டிருக்கிறார்கள். இதை நீங்கள் ஒரு சரியான தேர்வு கொள்கையை வைத்திருந்தால் சரியாக கையாள உதவும். இங்கே நான் பாராட்டுகளைப் பெற விரும்பவில்லை. ஆனால் நாங்கள் தேர்வுக்குழுவில் சில கொள்கைகளை வைத்திருந்தோம். ஒருமுறை இந்த பிரச்சனை தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்தது”

இதையும் படிங்க:ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை : ரசிகர்களுக்காக மெகா ஆஃபரை அறிவித்த – ஹாட் ஸ்டார்

“அதாவது விவிஎஸ் லக்ஷ்மண் லேசான காயத்தை சந்தித்திருந்தும் போட்டிக்கு முன்பாக குணமடைந்து விடுவேன் என்பதால் தம்மை தேர்வு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் போட்டி நாளன்று அவர் ஃபிட்டாகவில்லை. அப்போது ரோகித் சர்மாவை விளையாட வைக்கலாம் என்று நாங்கள் நினைத்த போது அவர் கால்பந்து விளையாடிய போது காயமடைந்து வெளியேறினார். அதனால் இறுதியாக ரித்திமான் சஹா அறிமுகமாக களமிறங்கினர். அன்றிலிருந்து முழுமையாக குணமடையாத வீரர்களுக்கு இடமில்லை என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். அது போல ஒருவர் குணமடையாகாமல் இருக்கும் பட்சத்தில் அவரை நீங்கள் தேர்வு செய்யாதீர்கள்” என்று கூறினார்.

Advertisement