ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை : ரசிகர்களுக்காக மெகா ஆஃபரை அறிவித்த – ஹாட் ஸ்டார்

Asia-Cup
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசியக்கோப்பை மற்றும் ஐ.சி.சி.யின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் என அடுத்தடுத்து பெரிய தொடர்கள் நடைபெற இருக்கின்றன. ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற இருக்கும் இவ்வேளையில் ரசிகர்கள் மத்தியில் இவ்விரு தொடர்களும் பெரிய வரவேற்பினை பெறும் என்பதனால் அந்தத் தொடர்களை ஒளிபரப்பும் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒரு மெகா ஆஃபரை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Asia Cup Trophy

- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாள் மற்றும் வங்கதேசம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடயிருக்கும் ஆசிய கோப்பை தொடரானது வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

அதை தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் முழுக்க முழுக்க 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு தொடருமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Hotstar

அதோடு இந்த போட்டிகளை ஆன் லைனில் மொபைல் போன் மூலம் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள் என்பதனால் தற்போது இந்த தொடர்களை ஒளிபரப்ப இருக்கும் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஒரு அதிரடி சலுகையை கையில் எடுத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் இந்த இரண்டு பெரிய தொடர்களை மொபைல் போனில் பார்க்க எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக ஒளிபரப்ப இருக்கிறோம் என ஹாட்ஸ்டார் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : நம்ம அணியை குறை சொல்றதுக்கு முன்னாடி முதலில் உங்களிடம் தேசப்பற்று இருக்கா? இந்திய ரசிகர்களை விமர்சித்த அஸ்வின்

இந்த அறிவிப்பின் மூலம் மேலும் கூடுதலாக பார்வையாளர்கள் போட்டிகளை நேரலையில் கண்டு களிப்பார்கள் என்பதாலேயே ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இப்படி ஒரு சலுகை வெளியானது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement