நம்ம அணியை குறை சொல்றதுக்கு முன்னாடி முதலில் உங்களிடம் தேசப்பற்று இருக்கா? இந்திய ரசிகர்களை விமர்சித்த அஸ்வின்

Ravichandran Ashwin
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையில் சொந்த மண்ணில் வலுவான கருதப்படும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பையாவது பயன்படுத்தி கோப்பையை வென்று கடந்த 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஆனால் முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளது, மிடில் ஆர்டர் வலுவாக இல்லாதது போன்ற நிறைய பிரச்சனைகள் இந்திய அணியில் இருப்பது ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

IND vs PAK World Cup

- Advertisement -

அதே போல விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற முதுகெலும்பு பேட்ஸ்மேன்கள் முக்கிய போட்டிகளில் சொதப்புவதில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்பது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வி மீண்டும் காட்டியது. முன்னதாக கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு ஐபிஎல் தான் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளத்திற்காக உயிரைக் கொடுத்து விளையாடும் இந்திய வீரர்கள் நாட்டுக்காக ஐசிசி நாக் அவுட் போன்ற அழுத்தமான போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில்லை என கடந்த சில வருடங்களாகவே ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

அஸ்வின் பதிலடி:
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை விமர்சிக்கும் இந்திய ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் தங்களுக்கு பிடிக்காத அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் நாட்டுக்காக சிறப்பாக செயல்படும் போது தேசப்பற்றுடன் ஆதரவு கொடுப்பதில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார். எடுத்துக்காட்டாக தங்களுக்கு மிகவும் பிடிக்காத மும்பை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் நாட்டுக்காக அசத்தும் போது சென்னை அணியை சேர்ந்த ரசிகர்கள் ஆதரவளித்து பாராட்டுவதில்லை என தெரிவிக்கும் ஐபிஎல் முடிந்தும் சண்டை போட்டுக் கொள்வதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

fans 1

“சூரியகுமார் யாதவ் துருப்பு சீட்டு வீரர் என்பதாலேயே ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சமயத்தில் நாம் இதற்கு முன் உலகக்கோப்பைகளை வென்ற காலத்திற்கு செல்வோம். அதாவது எம்எஸ் தோனி அல்லது எந்த கேப்டனாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய வீரர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இருப்பினும் சுமாராக செயல்படும் ஒரு வீரரை நீக்குவது பற்றி நீங்கள் விவாதித்தால் அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சூரியகுமார் யாதவ் எந்தளவுக்கு சிறந்த வீரர் என்பதை நாம் அறிவோம்”

- Advertisement -

“மேட்ச் வின்னராக அவர் ஏற்படுத்தும் தாக்கம் அபாரமாக இருக்கிறது. இருப்பினும் சிறந்த டி20 வீரராக அவர் இருந்த போதிலும் இவை அனைத்தும் ஐபிஎல் சண்டைகளால் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். உலகக்கோப்பை நடைபெறும் போது அதில் விளையாடும் அனைத்து வீரர்களும் இந்தியாவின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். எனவே ஐபிஎல் முடிந்ததும் அதன் மீது ஒரு துணியை போட்டுவிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லுங்கள்”

Ashwin-1

“மேலும் ஒரு வீரர் இந்தியாவுக்காக விளையாடினால் அவர் ஐபிஎல் தொடரிலும் நன்றாக விளையாடினார் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அதை செய்யாத ரசிகர்கள் ஐபிஎல் முடிந்த பின்பும் சண்டைகளில் ஈடுபடுகின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு முக்கியமான சேசிங் செய்யும் சூழ்நிலையில் விராட் கோலியுடன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்”

இதையும் படிங்க:2007இல் சச்சினுக்கு என்ன நடந்துச்சுன்னு மறந்துட்டீங்களா – ரவி சாஸ்திரியின் கருத்துக்கு டாம் மூடி பதிலடி, நடந்தது என்ன

“அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் மும்பை இந்தியன்ஸ் ரசிகராக இல்லாமல் போனாலும் இந்தியாவை சூரியகுமார் யாதவ் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஆதரவு கொடுக்க வேண்டுமல்லவா? எனவே நமது அணிக்கு எந்த மாதிரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தேர்வுக்குழுவினர் அறிவார்கள். மேலும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் அணி தேர்வு செய்யப்படும் போது ஒரு சில முக்கிய வீரர்கள் தவறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் உங்களுக்கு பிடித்த வீரர் இந்திய அணியில் இல்லை என்பதற்காக நீங்கள் மற்ற வீரர்களை இழிவு படுத்தாதீர்கள்” என்று கூறினார்.

Advertisement