வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டன் யார் மற்றும் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அவர் இந்தியாவுக்காக இதுவரை கேப்டனாக செயல்பட்டு எந்த ஐசிசி தொடர்களிலும் வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை.
அதை விட 2022 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, ராகுல், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர் கிரிக்கெட் வீரர்கள் சுமாராக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. எனவே அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்கலாம் என்பது பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினரின் எண்ணமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீகாந்த் ஆதரவு:
இருப்பினும் கடந்த டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார். அதனால் ரோகித் சர்மாவை வேண்டுமானாலும் நீக்குங்கள் ஆனால் விராட் கோலி கண்டிப்பாக விளையாடவேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தியா வெல்வதற்கு விராட் கோலி அவசியம் என்று முன்னாள் தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் 2023 உலகக் கோப்பையில் விராட் கோலி 765 ரன்கள் எடுத்த நிலையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் விளாசிய ரோகித் சர்மாவும் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். எனவே அவர்கள் இருவரும் விளையாட விரும்பினால் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவால் முடியாது என சொல்ல முடியாது என்று தெரிவிக்கும் ஸ்ரீகாந்த் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி இந்திய அணிக்கு அவசியம். அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ரோகித் சர்மாவும் ஓரளவு தன்னம்பிக்கையை கொடுக்கிறார். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் நல்ல ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது. ரோகித் சர்மா இந்தியாவுக்கு விளையாட தயாராக இருப்பதாக சொன்னால் உங்களால் நோ சொல்ல முடியாது. அவரும் உலகக்கோப்பை தோல்வியால் மனம் உடைந்திருப்பார்”
இதையும் படிங்க: இருப்பதிலேயே அந்த அணிக்கு தான் கஷ்டமான குரூப் அமைஞ்சுருக்கு.. 2024 உ.கோ அட்டவணை பற்றி கம்பீர்
“எனவே ஒரு ஐசிசி கோப்பையை வென்று அவர் விடைபெற விரும்புவார். 2007 டி20 உலகக் கோப்பையில் இருந்த அவர் மீண்டும் அந்த வெற்றியை பெற விரும்புவார். மறுபுறம் விராட் கோலி கண்டிப்பாக டி20 உலகக் கோப்பையை வெல்ல விரும்புவார். 13 மாதங்களுக்கு முன்பாக நடந்த உலக கோப்பையில் அசத்திய அவர் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே தயாராக இருந்தால் உங்களால் அவர்களை நீக்க முடியாது. கேப்டன்ஷிப்பை பாண்டியாவுக்கு கொடுப்பதற்கு முன் அவருடைய ஃபிட்னஸையும் பாருங்கள்” என்று கூறினார்.