இருப்பதிலேயே அந்த அணிக்கு தான் கஷ்டமான குரூப் அமைஞ்சுருக்கு.. 2024 உ.கோ அட்டவணை பற்றி கம்பீர்

Gautam Gambhir 2
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது. வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் துவங்கும் இந்த தொடர் 29ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாஸ் நகரில் நிறைவு பெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. அதில் மொத்தம் உலகின் டாப் 20 கிரிக்கெட் அணிகள் 55 போட்டிகளில் விளையாட உள்ளன.

இந்த 20 அணிகளும் குரூப் ஏ, பி, சி, டி ஆகிய 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாட உள்ளன. இருப்பினும் சில போட்டிகள் எப்படியாவது நடந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐசிசி இந்த 4 பிரிவுகளை வடிவமைத்துள்ளது என்றே சொல்லலாம். அதில் முதலாவதாக தங்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை கொடுக்க போகும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எப்படியாவது மோத வேண்டும் என்பதற்காக குரூப் ஏ பிரிவில் ஐசிசி சேர்த்துள்ளது.

- Advertisement -

கடினமான குரூப்:
அதனால் ஜூன் 9ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூயார்க் நகரில் மோத உள்ளன. அதே போல நூற்றாண்டு பரம எதிரிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை பிரிவில் ஐசிசி சேர்த்துள்ளது. அதை விட 2022 டி20 உலகக் கோப்பையில் செமி ஃபைனல் செல்வதற்கு தயாராக இருந்த தென்னாப்பிரிக்காவை கடைசி நேரத்தில் தோற்கடித்து நெதர்லாந்து வீட்டுக்கு அனுப்பியது.

மேலும் 2023 உலகக் கோப்பையிலும் தென்மாப்பிரிக்காவை அசால்ட்டாக நெதர்லாந்து தோற்கடித்தது. எனவே அவ்விரு அணிகள் மீண்டும் மோத வேண்டும் என்பதற்காக குரூப் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை வங்கதேசம், நேபாள் ஆகிய அணிகள் இருக்கும் வகையில் ஐசிசி அட்டவணையை வடிவமைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த அட்டவணையில் தென்னாப்பிரிக்காவுக்கு மிகவும் கடினமான குரூப் கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் கம்பீர் இம்முறை நெதர்லாந்தை அந்த அணி வீழ்த்தும் என நம்புவதாக கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பார்ப்பதற்கு இது கடினமாக தெரிகிறது. ஆனால் தென்னாப்பிரிக்கா இம்முறை ஆபத்திலிருந்து தப்பலாம் என்பதை யார் அறிவார்கள். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் நீங்கள் சூப்பர் 8 சுற்றில் நல்ல அணிகளை பார்க்க விரும்புவீர்கள்”

இதையும் படிங்க: பாண்டியாவுக்கு எதிர்ப்பு? ரோஹித் போலவே ஏற்படும் கதி.. பொல்லார்ட் இன்ஸ்டாகிராம் பதிவால் மும்பை ரசிகர்கள் சோகம்

“மேலும் சவால் இருக்கும் இடத்திலேயே போட்டியிட விரும்புவீர்கள். இருப்பினும் இந்த குரூப் தென்னாபிரிக்காவுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே கம்பேக் கொடுப்பதற்கு குறைவான வாய்ப்புகளே இருக்கும். அங்கே யாராவது லேசான அழுத்தத்தை கொடுத்தாலும் உங்களால் கம்பேக் கொடுப்பது கடினமாகி விடும். இருப்பினும் இம்முறை தென்னாப்பிரிக்கா சிறப்பாக விளையாடி சூப்பர் 8க்கு வரும்” என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement