- Advertisement -
ஐ.பி.எல்

அஸ்வினை நிறுத்துங்க.. திரிபாதியை தூக்கிட்டு அவரை கொண்டு வாங்க.. சிஎஸ்கே ஜெய்க்க ஸ்ரீகாந்த் 4 ஆலோசனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்த தோல்விகளைப் பதிவு செய்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த வருடம் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை போராடி வென்றது. ஆனால் அடுத்தப் போட்டியில் பெங்களூருவிடம் 17 வருடங்கள் கழித்து சென்னை தங்களது கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் 197 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அடுத்ததாக ராஜஸ்தானுக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் சென்னை பரிதாபமாக தோற்றது. இந்தத் தோல்விகளுக்கு சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் ராகுல் திரிபாதி தனது உடலைக் குலுக்குவதற்கு நிகராக ரன்கள் அடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

ஸ்ரீகாந்த் 4 ஆலோசனை:

இந்நிலையில் அவருக்கு பதிலாக டேவோன் கான்வே விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றியாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இளம் இந்திய வீரர் அன்சுல் கம்போஜ் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தும் அவர் பவர் பிளேவில் அஸ்வின் பவுலிங் போடுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் சிவம் துபே இம்பேக்ட் வீரராக அல்லாமல் முதன்மையான வீரராக விளையாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மீண்டும் பாதைக்கு வருவதற்கு தேவையான 4 ஆலோசனைகள் பற்றி ஸ்ரீகாந்த் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஓவர்டன் இடத்தில் டேவோன் கான்வே விளையாட வேண்டும். அத்துடன் அன்சுல் கம்போஜை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வாருங்கள். அஸ்வினை பொறுத்த வரை அவரை அணியிலிருந்து நீக்காதீர்கள். ஆனால் பவர்ஃபிளே ஓவர்களில் பவுலிங் செய்வதை நிறுத்துங்கள்”

- Advertisement -

தேவையான மாற்றங்கள்:

“7 – 18 வரையிலான ஓவர்களில் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார். ஜடேஜா, நூர் அஹ்மத் எளிதாக 10 ஓவர்களைக் கடத்தி விடுவார்கள். நானாக இருந்தால் ராகுல் திரிபாதியை நீக்கி விட்டு கம்போஜை கொண்டு வந்து ஓவர்டனுக்கு பதிலாக கான்வேயை விளையாட வைப்பேன். அதே போல சிவம் துபேவை முதன்மை அணிக்குள் கொண்டு வருவேன்”

இதையும் படிங்க: தோனி சிஸ்கே’வின் போனஸ்.. இதுக்கு பேசாம கேப்டனாக விளையாடலாம்.. சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து

“ஆண்ட்ரே சித்தார்த்தை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். முகேஷ் சௌத்ரியும் நல்ல ஆப்ஷன். கடந்த காலங்களில் அவர் சென்னை அணிக்காக அசத்தியுள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல கம்போஜ், சித்தார்த், முகேஷ் சௌத்திரி போன்ற இளம் வீரர்கள் உள்ளூரில் அசத்தலாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். எனவே தீபக் ஹூடா, திரிபாதி, விஜய் சங்கர் போன்ற காலம் கடந்த வீரர்களை கழற்றி விட்டாலே சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.

- Advertisement -