ஐபிஎல் 2023 ஏலம் : மாஸ்டர் கோச் தலைமையில் கோப்பை வெல்ல கொல்கத்தா தக்க வைத்த – கழற்றி விட்ட வீரர்களின் பட்டியல்

KKR vs SRH Tim Southee
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களிலும் மிகவும் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023 மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இந்தியாவிலேயே நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ மும்முரமாக செய்து வருகிறது. அதில் முக்கிய கட்டமாக 2023 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சிறிய அளவில் அதாவது மினி அளவில் வரும் நவம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டதால் அதற்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வகையில் 2018க்குப்பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு பெங்களூருவில் 2 நாட்கள் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது.

KKR

- Advertisement -

அதன் காரணமாக இம்முறை மினி அளவில் நடைபெறும் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் டிரேடிங் விண்டோ வாயிலாக குறிப்பிட்ட சில வீரர்களை வாங்கிக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவித்திருந்த பிசிசிஐ இறுதி பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் அனைத்து அணிகளும் தங்களது பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கோப்பைகளை வென்று 3வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2023 சீசனில் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக முற்றிலும் புதிய அணுகு முறையை கையாண்டுள்ளது.

மாஸ்டர் கோச்:

ஏனெனில் இந்த வருடம் கேப்டன்ஷிப் அனுபவம் வாய்ந்த இளம் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்ட போதிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத அந்த அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் பதவி விலகினார். அந்த நிலையில் அவருக்கு பதிலாக அடுத்தடுத்த ரஞ்சிக் கோப்பைகளை வென்று இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் சர் அலெஸ் பெர்குசன் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களால் கொண்டாடப்படும் சந்திரகாந்த் பண்டிட் புதிய பயிற்சிகளாக நியமிக்கப்பட்டார்.

Chandrakant Pandit

அவர் வந்ததுமே பெரிய மாற்றத்தை போல் ஏலத்துக்கு முன்பாகவே ட்ரேடிங் விண்டோ வாயிலாக ஷார்துல் தாகூர், ரஹ்மதுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன் ஆகிய 3 வீரர்களை பெரிய தொகைக்கு வாங்கியுள்ள கொல்கத்தா நிர்வாகம் ஷ்ரேயஸ் ஐயர், அண்ட்ரே ரசல், சுனில் நரேன் உள்ளிட்ட நட்சத்திரங்களை மீண்டும் தக்க வைத்துள்ளது. மேலும் இந்த வருடம் சுமாராக செயல்பட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரையும் தக்க வைத்துள்ள அந்த அணி நிர்வாகம் நாட்டுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுத்த பட் கமின்ஸ், சாம் பில்லிங்ஸ் ஆகியோரை கோரிக்கையின் அடிப்படையில் விடுவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன் ஆரோன் பின்ச், அஜிங்கிய ரகானே, முகமது நபி, அலெக்ஸ் ஹேல்ஸ், தமிழக வீரர் பாபா இந்திரஜித் ஆகியோரை விடுவித்துள்ள அந்த அணியில் தற்போது 11 வீரர்களுடன இடங்கள் காலியாக உள்ளது. அதை வாங்குவதற்காக டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் 7.05 கோடிகளுடன் களமிறங்கும் கொல்கத்தா அதிகபட்சமாக 3 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும்.

KKR Shreyas Iyer

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் , வெங்கடேஷ் ஐயர், ஆன்ட்ரே ரசல், சுனில் நரேன், ஷர்துல் தாகூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சௌதீ, ஹர்ஷிட் ராணா, வருண் சக்ரவர்த்தி, அன்குல் ராய், ரிங்கு சிங்

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : வார்னருக்கு செய்த அவமரியாதைக்கு – வில்லியம்சன் உட்பட ஹைதராபாத் கழற்றி விட்ட – தக்க வைத்த வீரர்களின் பட்டியல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: பட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், ஷிவம் மாவி, முஹம்மத் நபி, சமிகா கருணரட்னே, ஆரோன் பின்ச், அலெஸ் ஹேல்ஸ், அபிஜீட் தோமர், அஜிங்க்ய ரகானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், ப்ரதம் சிங், ரமேஷ் குமார், ராசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்

Advertisement