ஐபிஎல் 2023 ஏலம் : வார்னருக்கு செய்த அவமரியாதைக்கு – வில்லியம்சன் உட்பட ஹைதராபாத் கழற்றி விட்ட – தக்க வைத்த வீரர்களின் பட்டியல்

PBKS vs SRH
- Advertisement -

உலக அளவில் நடைபெறும் பிரீமியர் லீக் டி20 தொடர்களுக்கு முன்னோடியாக திகழும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023 மார்ச் மாதம் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. இந்த வருடம் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்றதால் 2018க்குப்பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு கடந்த பிப்ரவரியில் 2 நாட்கள் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதன் காரணமாக 2023 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சிறிய அளவில் அதாவது மினி அளவில் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்தது.

SRH

அதற்கு முன்பாக 10 அணிகளும் குறிப்பிட்ட வீரர்களை ஒப்பந்த முறைப்படி மாற்றிக் கொள்ளலாம் என்றும் இறுதி பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து தீயாக செயல்பட்ட அந்தந்த அணி நிர்வாகங்கள் 2023 சீசன் ஏலத்துக்கு முன்பாக தங்களது இறுதி கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணி நிர்வாகம் தங்களது அணியின் கேப்டனாக நியமித்திருந்த நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சனை அதிரடியாக விடுவித்துள்ளது.

- Advertisement -

முன்னதாக பேட்டிங்கில் மலை போல ரன்களை குவித்து 2016இல் முதலும் கடைசியாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 2020இல் முதல் முறையாக ரன்களை குவிக்க தடுமாறியதால் பாதியிலேயே கேப்டன் பதவியிலிருந்து நீக்கி கூல்ட்ரிங்க்ஸ் தூக்க வைத்து பெஞ்சில் அமர வைத்து அவமானப்படுத்திய ஹைதராபாத் நிர்வாகம் இறுதியில் மொத்தமாக கழற்றி விட்டது ரசிகர்களை கோபப்படுத்தியது.

ஹைதராபாத் அணி:

அதனால் வெளியேறிய அவர் அதன் பின் 2021 டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்று பின்பு டெல்லி அணியில் வெற்றிகரமாக செயல்படுவது வேறு கதை. ஆனால் மறுபுறம் 14 கோடிக்கு அவரது இடத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்ட வில்லியம்சன் எல்போ காயத்தால் ரன்களை குவிக்க தடுமாறி இந்த வருட தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அப்படி சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டு வருவதால் அவரை அதிரடியாக விடுவித்துள்ள ஹைதராபாத் நிர்வாகத்தை பார்க்கும் ரசிகர்கள் வார்னருக்கு செய்த அவமரியாதைக்கு இதற்கு நீங்கள் தகுதியானவர்கள் என்று சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். அத்துடன் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட மற்றொரு நட்சத்திரம் நிக்கோலஸ் பூரன் உட்பட 12 தேவையற்ற வீரர்களை அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளது.

- Advertisement -

Natarajan Nattu SRH

இருப்பினும் ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்கம், கிளன் பிலிப்ஸ், உம்ரான் மாலிக், தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற முக்கிய வீரர்களை மீண்டும் அந்த அணி தக்க வைத்துள்ளது. மேலும் 12 வீரர்களை விடுவித்ததால் ஹைதராபாத் அணியில் தற்போது இதர அணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 13 வீரர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளது. அதில் அந்த அணி அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். அதை வாங்குவதற்கு அந்த அணியிடம் எதிரணிகளை காட்டிலும் அதிகபட்சமாக 42.25 கோடிகள் என்ற பெரிய ஏலத்தொகை கையிருப்பு உள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்: அப்துல் சமட், ஐடண் மார்க்ரம், ராகுல் திரிபாதி, க்ளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜென்சென், வாஷிங்டன் சுந்தர், பாசல்ஹக் பரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஸ்வர் குமார், டி நடராஜன் , உம்ரான் மாலிக்

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : முதல் கோப்பையை வெல்ல பெங்களூரு தக்க வைத்த – விடுவித்த வீரர்கள், கையிருப்பு தொகை எவ்வளவு – விவரம் இதோ

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரோமரியோ ஷெபார்ட், சவூரப் துபே, சீன் அப்போட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்

Advertisement