ஐபிஎல் 2023 ஏலம் : முதல் கோப்பையை வெல்ல பெங்களூரு தக்க வைத்த – விடுவித்த வீரர்கள், கையிருப்பு தொகை எவ்வளவு – விவரம் இதோ

RCB Faf Du Plessis
- Advertisement -

உலக புகழ் பெற்ற ஐபிஎல் தொடர் வரலாற்றில் 16வது முறையாக வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டதால் அதற்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வகையில் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு 2018க்குப்பின் மெகா வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 2 நாட்கள் பெங்களூருவில் நடைபெற்றது. அதன் காரணமாக 2023 சீசனுக்காக சிறிய அளவில் அதாவது மினி அளவில் வீரர்களுக்கான ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களையும் விடுவிக்கும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

RCB Faf Virat

- Advertisement -

அத்துடன் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட வீரர்களை டிரேடிங் விண்டோ வாயிலாக தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்த பிசிசிஐ டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி வீரர்கள் ஏலம் நடைபெறும் என்று அறிவித்தது. அதனால் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கழற்றி விட்ட நிலையில் காலம் காலமாக முதல் கோப்பையை முத்தமிடுவதற்காக போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரன்டாஃப்பை டிரேடிங் விண்டோ வாயிலாக மும்பை அணிக்கு கொடுத்தது.

பெங்களூரு அணி:

அத்துடன் ஒரு கோப்பையை கூட வென்று தரவில்லை என்பதற்காக விமர்சனங்களை சந்தித்ததால் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து சாதரண வீரராக விளையாட துவங்கியுள்ள நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை முக்கிய வீரராக தக்க வைத்துள்ள பெங்களூரு அணி நிர்வாகம் இந்த வருடம் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட பஃப் டு பிளேசிஸை மீண்டும் கேப்டனாக தக்க வைத்துள்ளது. மேலும் 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு கம் பேக் கொடுக்கும் அளவுக்கு மிரட்டிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், நாக் அவுட் சுற்றில் அசத்திய ரஜத் படிடார், சுழல் நாயகன் வணிந்து ஹசரங்கா, ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல், ஜோஸ் ஹேசல்வுட், முகமது சிராஜ் போன்ற நட்சத்திர முக்கிய வீரர்களை மீண்டும் பெங்களூரு நிர்வாகம் தக்க வைத்துள்ளது.

Rajat Patidar 112

அதே சமயம் இந்த வருடம் சுமாராக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸின் ஷேஃபார்ன் ருத்தர்போர்ட் உள்ளிட்ட 6 தேவையற்ற வீரர்களை பெங்களூரு நிர்வாகம் விடுவித்துள்ளது. அதன் காரணமாக தற்போது அந்த அணியில் அதிகபட்சமாக 7 வீரர்களுக்கான இடம் காலியாக உள்ளது. அந்த 7 பேரை டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் மினி ஏலத்தில் வாங்குவதற்கு களமிறங்கும் பெங்களூரு நிர்வாகத்தால் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். அவர்களை வாங்குவதற்கு அந்த அணியிடம் 8.75 கோடி ஏலத்தொகை கையிருப்பு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : மும்பை தக்க வைத்த – வெளியேற்றிய 13 வீரர்கள், கையிருப்பு தொகை எவ்வளவு – அதிகாரபூர்வ பட்டியல் இதோ

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்: பஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயஷ் பிரபுதேசாய், ரஜத் படிடார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ரவாட், பின் ஆலன், கிளன் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷபாஸ் அஹ்மத், ஹர்ஷல் பட்டேல், டேவிட் வில்லி, கரன் சர்மா, மகிபால் லோம்ரர், முகமத் சிராஜ், ஜோஷ் ஹேசல்வுட், சித்தார்த் கௌல், ஆகாஷ் தீப்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: ஜேசன் பெஹரண்டார்ஃப், அநீஸ்வர் கவுதம், சாமா மிலிண்ட், லூவினித் சிசோடியா, ஷேர்பின் ருத்தெர்போர்ட்

Advertisement