ஐபிஎல் 2023 ஏலம் : மும்பை தக்க வைத்த – வெளியேற்றிய 13 வீரர்கள், கையிருப்பு தொகை எவ்வளவு – அதிகாரபூர்வ பட்டியல் இதோ

Mumbai Indians MI
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவிலேயே கோலாகலமாக நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. முன்னதாக இந்த வருடம் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டதால் அதற்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் அனைத்து வீரர்களும் கலைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 2 நாட்கள் பெங்களூருவில் மெகா வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதன் காரணமாக 2023 சீசனுக்கான ஏலம் மினி அளவில் அதாவது சிறிய அளவில் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

MI Jaspirt Bumrah

அதற்கு முன்பாக டிரேடிங் விண்டோ வாயிலாக தேவைப்படும் குறிப்பிட்ட வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்த பிசிசிஐ ஒவ்வொரு அணி நிர்வாகமும் தாங்கள் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கெடு விதித்திருந்தது. அந்த வகையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகத் திகழும் மும்பை இந்தியன்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்திற்கு உள்ளானது.

- Advertisement -

மும்பை அணி:

அதனால் கடந்த முறை செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மும்பை இம்முறை நடைபெறும் ஏலத்துக்கு முன்பாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரன்டாப்ஃபை பெங்களூர் அணியிடமிருந்து டிரேடிங் விண்டோ வாயிலாக வாங்கியது. அத்துடன் கேப்டன் ரோகித் சர்மாவை தக்க வைத்துள்ள அந்த அணி சூரியகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷான் கிசான் போன்ற நட்சத்திர வீரர்களை மீண்டும் தக்க வைத்துள்ளது. மேலும் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ட்ரிஷன் ஸ்டப்ஸ், தென் ஆப்பிரிக்காவின் குட்டி ஏபிடி என்று அழைக்கப்படும் தேவாலட் ப்ரேவிஸ் போன்ற இளம் வீரர்களை தக்க வைத்துள்ள அந்த அணி நிர்வாகம் இந்த வருடம் காயத்தால் பங்கேற்காத ஜோஃப்ரா ஆர்ச்சரை மீண்டும் தக்க வைத்துள்ளது.

Kieron Pollard 1

ஆனால் காலம் காலமாக காட்டுத் தனமான பேட்டிங் செய்து 5 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய வெஸ்ட் இண்டீஸ் நாயகன் கைரன் பொல்லார்ட்டை இந்த வருடம் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் தங்களது பேட்டிங் பயிற்சியாளராக அறிவித்து அசத்தியுள்ளது. இருப்பினும் இந்த வருடம் படு தோல்வியை சந்தித்து கடைசி இடத்தைப் பிடிக்க சுமாரான செயல்பாடுகளை செயல்படுத்தி முக்கிய காரணமாக அமைந்த பசில் தம்பி, ஜெயதேவ் உனட்கட், டைமல் மில்ஸ் போன்ற வீரர்களை அந்த அணி கழற்றி விட்டுள்ளது.

- Advertisement -

இதனால் அந்த அணியில் தற்போது அதிகபட்சமாக 9 வீரர்களுக்கான இடம் காலியாக உள்ளது. அதில் அதிகபட்சமாக 3 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். அந்த வீரர்களை வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் மினி ஏலத்தில் வாங்குவதற்காக அந்த அணியிடம் தற்போது 20.55 கோடிகள் ஏலத் தொகை கை வசம் உள்ளது.

MI Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்:
ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ரமந்தீப் சிங், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ட்ரிஸ்தன் ஸ்டப்ஸ், தேவால்டு ப்ரேவிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், குமார் கார்த்திகேயே, ரித்திக் ஷாக்கீன் , ஜேசன் பெஹரேண்டாஃப், ஆகாஷ் மத்வால்

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : ப்ராவோவுக்கு டாட்டா காட்டி சென்னை தக்க வைத்த – கழற்றி விட்ட வீரர்கள், கையிருப்பு தொகை எவ்வளவு – விவரம் இதோ

மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: கைரன் பொல்லார்ட், அன்மோல்ப்ரீத் சிங், ஆர்யன் ஜுயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், பாபின் ஆலன், ஜெயதேவ் உனட்கட், மயங் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் பௌதீ, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்

Advertisement