ஐபிஎல் 2023 ஏலம் : ப்ராவோவுக்கு டாட்டா காட்டி சென்னை தக்க வைத்த – கழற்றி விட்ட வீரர்கள், கையிருப்பு தொகை எவ்வளவு – விவரம் இதோ

bravo
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசனை வரும் மார்ச் மாதம் இந்தியாவிலேயே நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ மும்முரமாக செய்து வருகிறது. முன்னதாக இந்த வருடம் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய 2 அணிகள் உருவாக்கப்பட்டதால் அதற்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வகையில் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு கடந்த பிப்ரவரியில் பெங்களூருவில் 2 நாட்கள் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதன் காரணமாக 2023 சீசனுக்காக ஏலம் சிறிய அளவில் அதாவது மினி அளவில் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளதாக பிசிசியை அறிவித்துள்ளது.

CSK Ms DHoni

அதற்கு முன்பாக ஒவ்வொரு அணி நிர்வாகங்களும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று பிசிசிஐ உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கு முன்பாக டிரேடிங் விண்டோ வாயிலாக வீரர்களை மாற்றிக் கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் எந்த வீரர்களையும் ஒப்பந்த முறைப்படி மாற்றிக் கொள்ளவில்லை.

- Advertisement -

சென்னை அணி:

மேலும் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் சொதப்பி காயத்தால் வெளியேறிய ரவீந்திர ஜடேஜாவுக்கும் சென்னை நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் ஏற்பட்டதால் அடுத்த வருடம் விளையாட மாட்டார் என்று வந்த செய்திகளை பொய்யாக்கும் வகையில் அவரை அந்த அணி நிர்வாகம் முக்கிய வீரராக தக்க வைத்துள்ளது. அவருக்கு முன்பாக தமிழக ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் எம்எஸ் தோனி தனது கேரியரின் கடைசிப் போட்டியில் சென்னை மண்ணில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். அதனால் 4 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் 2வது வெற்றிகரமான கேப்டனாக திகழும் அவரது வாக்கை நிறைவேற்றும் வகையில் மீண்டும் சென்னை நிர்வாகம் அவரை கேப்டனாக தக்க வைத்துள்ளது.

MS Dhoni Jadeja

அவருடன் ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே, முகேஷ் சவுத்ரி, மொய்ன் அலி, தீபக் சஹர் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் கடந்த பல வருடங்களாக நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ட்வயன் ப்ராவோவை சென்னை நிர்வாகம் கழற்றி வைத்துள்ளது அந்த அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஏலத்தில் அவரை குறைந்த விலைக்கு மீண்டும் வாங்குவதற்கு அந்த அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் ஓய்வு பெற்ற ராபின் உத்தப்பா, ரன்களை வாரி வழங்கி இந்த வருடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த இங்கிலாந்து வீரர் கிறிஸ் ஜோர்டன் ஆகியோரை சென்னை நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. அதை விட பெஞ்சில் அமர்ந்திருந்த 2 தமிழக இளம் வீரர்கள் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோரையும் சென்னை மொத்தமாக விடுவித்துள்ளது.

Bravo

தற்போது இவர்களை அணியிலிருந்து விடுவித்ததால் சென்னை அணியில் அதிகபட்சமாக 7 வீரர்களின் இடம் காலியாக உள்ளது. அவர்களை மினி ஏலத்தில் சென்னை நிர்வாகம் வாங்கும் போது அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம். அவர்களை வாங்குவதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் ஏலத்தில் 20.45 கோடிகளுடன் சென்னை அணி களமிறங்க தயாராகியுள்ளது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்: எம்எஸ் தோனி (கேப்டன்), டேவோன் கோன்வே, ருதுராஜ் கைக்வாட், அம்பத்தி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ட்வைன் பிரிடோரிஸ், மிட்செல் சாட்னெர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹர், பிரஷாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா.

இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : மும்பை தக்க வைத்த – வெளியேற்றிய 13 வீரர்கள், கையிருப்பு தொகை எவ்வளவு – அதிகாரபூர்வ பட்டியல் இதோ

சென்னை விடுவித்துள்ள வீரர்களின் பட்டியல்: ட்வயன் ப்ராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன்

Advertisement