பெங்களூரு அணியின் தோல்விக்கு விராட் கோலி காரணமா? – வறுத்தெடுக்கும் ரசிகர்கள் (என்ன நடந்தது?)

RCB Faf Virat
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 43-வது போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய அணிகள் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 170/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு கேப்டன் டு பிளசிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க பாரமின்றி தவித்து வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு வழியாக அரைசதம் அடித்து 58 ரன்கள் குவித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

Virat Kohli vs GT

- Advertisement -

அவருக்கு உறுதுணையாக இளம் வீரர் ரஜத் படிடார் 52 (32) ரன்களும் கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 33 (18) ரன்களும் எடுத்தனர். குஜராத் சார்பில் அதிகபட்சமாக பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 171 என்ற நல்ல இலக்கை துரத்திய குஜராத்துக்கு சஹா 29 (22) சுப்மன் கில் 31 (28) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க சாய் சுதர்சன் 20 (14) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார்.

மிரட்டும் குஜராத்:
அதனால் 95/4 என தடுமாறிய குஜராத் வெற்றி பெறுவதற்கான ரன்ரேட் எகிறிய நிலையில் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாடியா ஆகியோர் பார்ட்னர்ஷிப் போட்டு அதிரடி சரவெடியாக பவுண்டரிகளை தெறிக்க விட்டனர். குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்பட்ட போது மிரட்டலாக செயல்பட்ட இந்த ஜோடியில் டேவிட் மில்லர் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 39* (24) ரன்கள் 5 பவுண்டரி 2 சிக்சருடன் ராகுல் திவாடியா 43* (25) ரன்கள் எடுத்து அற்புதமான பினிஷிங் கொடுத்ததால் 19.3 ஓவர்களிலேயே 174/4 ரன்கள் எடுத்த குஜராத் சூப்பரான வெற்றி பெற்றது.

GT vs RCB Siraj Miller Rahul Tewatia

இதனால் பங்கேற்ற 9 போட்டிகளில் 8 வெற்றியை பதிவு செய்த அந்த அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து எதிரணிகளை மிரட்டி வருகிறது. மறுபுறம் 10 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றாலும் 5 தோல்விகளை பதிவு செய்த பெங்களூரு அதிலும் கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியான 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் பின்தங்கியது.

- Advertisement -

விராட் தான் காரணம்:
முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் போன்ற நிறைய சரித்திர சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி இந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் 9 போட்டிகளில் வெறும் 123 ரன்களை 17.00 என்ற சராசரியில் எடுத்து படுமோசமான ஃபார்மில் திண்டாடி வருகிறார்.

குறிப்பாக வரலாற்றிலேயே முதல்முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டான அவர் கடும் அழுத்தத்தில் இருக்கும் நிலையில் இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி பொறுப்புடனும் நிதானமாகவும் பேட்டிங் செய்த அவர் 6 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 53 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து முதல் அரை சதமடித்து நிம்மதி அடைந்துள்ளார். அதன் காரணமாகவே நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதேசமயம் இப்போட்டியில் பெங்களூரு தோல்வி அடைய விராட் கோலி தான் காரணம் என்று நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏனெனில் 200 – 300 போன்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் பேட்டிங் செய்தால் கூட வெற்றி கிடைக்காத இந்த டி20 கிரிக்கெட்டில் 53 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த அவர் 109.43 சுமாரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்தார். அதுதான் பெங்களூரு அணி மேலும் 20 – 30 கூடுதலாக எடுப்பதை தடுத்து தோல்விக்கு முக்கிய பங்காற்றியதாக ஒருசில ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். குறிப்பாக அணி நலனுக்காக விளையாடாத விராட் கோலி சொந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே விளையாடியதாக அவர்கள் கூறுகின்றனர்.

அடித்தாலும் குற்றம்:
“விராட் கோலி அரை சதம் அடித்தது பெங்களூரு மற்றும் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் போட்டியின் அடிப்படையில் பார்க்கும்போது அந்த ரன்களை அவர் விரைவாக அடித்திருந்தால் பெங்களூருவுக்கு நன்மை பயக்கும்” என்று இது பற்றி நட்சத்திர தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : துன்பத்திலும் இன்பம் ஆனா ரொம்ப லேட் ! சென்னை கேப்டன்ஷிப் கைமாறல் பற்றி ரசிகர்கள் கருத்து

ஆனால் அடுத்தடுத்த கோல்டன் டக் அவுட் என்ற நிலைமைக்கு இது ஒன்றும் மோசமில்லை என இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விராட் கோலியின் ரசிகர்கள் இது போன்ற கடினமான தருணங்களில் யாராக இருந்தாலும் அவர்களின் ஆட்டத்தில் சற்று மந்தம் இருக்கத் தானே செய்யும் என்று கூறுகின்றனர். மேலும் ரன்கள் அடிக்காத போது குற்றம் கூறியவர்கள் த்ற்போது ரன்கள் அடித்தாலும் குற்றம் கூறுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement