என்னை பொறுத்தவரை அதுவும் சாதாரண ஒன்று தான். பாக் அணிக்கெதிரான போட்டி குறித்து பேசிய – விராட் கோலி

kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரானது துவங்கியுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது ஓமன் நாட்டில் நடைபெற்று வர குரூப் போட்டிகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்க உள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 24-ஆம் தேதி மோத இருக்கின்றன. இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

Cup

- Advertisement -

ஏனெனில் பரம எதிரிகளாக கிரிக்கெட் உலகில் பார்க்கப்படும் இந்த இரு அணிகளும் ஐசிசி கோப்பைகளில் மட்டுமே மோதிக் கொள்வதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு பெருகி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகம் தான் எங்களது தாய்மண் போன்றது அங்கு நாங்கள் பல ஆண்டு காலமாக விளையாடி வருவதால் இந்திய அணியை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்று விடுவோம் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி என்பது ஒரு சாதாரண போட்டிதான். மற்ற போட்டிகளை போன்றே அதுவும் எங்களுக்கு ஒரு போட்டி.

Pak

அந்த போட்டியின் மீதான மற்றவர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய அணிக்கு அந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. நாங்கள் எதிர்த்து விளையாட போகும் ஒரு போட்டியாகவே அதனை கருதுகிறோம் என்று விராட் கோலி கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : யுஸ்வேந்திர சாஹலிடம் விளையாட்டாய் பேசியதால் ஜெயிலுக்கு சென்ற யுவ்ராஜ் சிங் – ஜாமினில் விடுவிப்பு

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எனக்கு தனிப்பட்ட முறையில் அந்த போட்டிக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் மைதானத்தில் இருக்கும். எனது நண்பர்கள் சிலரும் என்னிடம் டிக்கெட் உள்ளதா ? முன்வரிசையில் டிக்கெட் கிடைக்குமா ? என்று கேட்பார்கள். நான் அவர்களுக்கு இல்லை என்று கூறும் நிலை தான் வரும் என கோலி சாதாரணமாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement