யுஸ்வேந்திர சாஹலிடம் விளையாட்டாய் பேசியதால் ஜெயிலுக்கு சென்ற யுவ்ராஜ் சிங் – ஜாமினில் விடுவிப்பு

Yuvraj
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தற்போது ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது முற்றிலும் உண்மையான செய்திதான். யுவராஜ் சிங்கின் இந்த கைதுக்கு காரணம் யாதெனில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாததால் சமூக வலைதளம் வாயிலாக நேரத்தை கழித்து வந்தனர்.

YuvrajSingh

- Advertisement -

அப்படி அவர்களுடன் விளையாடிய சக வீரர்களுடன் உரையாடுவது, ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது என பல்வேறு செயல்களில் தங்களது நேரத்தினை கழித்து வந்தனர். இந்நிலையில் அதே போன்று யுவராஜ் சிங்கும் சமூக வலைத்தளத்தின் மூலமாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக உரையாடினார்.

அப்போது அந்த உரையாடலில் பட்டியலின ஜாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் குறிப்பிட்ட அந்தப் பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக அவர் மீது வக்கீல் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் புகார் பதிவு செய்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

yuvi

இந்நிலையில் தான் பேசிய அந்த வார்த்தைகளுக்காக ஏற்கனவே மன்னிப்பு கேட்டும் யுவராஜ் சிங்கை அவர்கள் விடவில்லை. இந்த வழக்கின் விசாரணையின்போது யுவராஜ்சிங் பேசிய வார்த்தைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சில மணிநேரங்கள் காவலில் இருந்த அவர் சொந்த ஜாமீனில் இதே போன்று மீண்டும் பேச மாட்டேன் என்று உறுதி அளித்து வெளியே வந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கண்டிப்பா இவர் உலககோப்பை அணியில் இருந்திருக்க வேண்டும் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

ஏற்கனவே தான் பேசிய அந்த சில வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டு இருந்த யுவராஜ் சிங் தற்போது மீண்டும் மன்னிப்பு கேட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement