அவரை இறக்கி நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பல. கடைசி போட்டியில் அவர் ஆடமாட்டார் – விராட் கோலி பளீர்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுன் நகரில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும். ஏற்கனவே இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளதால் தற்போது மீண்டும் தங்களது உத்வேகத்தை காண்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

IND

- Advertisement -

அதுமட்டுமின்றி முதல் போட்டியில் விளையாடிய கேப்டன் விராட் கோலி 2-வது போட்டியில் முதுகு வலி காரணமாக விளையாடாமல் போனது இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் மூன்றாவது போட்டிக்கு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் நாளைய போட்டியில் ஏற்படக்கூடிய மாற்றம் குறித்து இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கோலி கூறுகையில் : நான் தற்போது விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருக்கிறேன். இதன் காரணமாக நாளை 3-வது போட்டியில் நான் நிச்சயம் களம் இறங்குவேன். அதேவேளையில் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் சிராஜ் நாளைய போட்டியில் நிச்சயம் விளையாடமாட்டார்.

siraj 1

ஏனெனில் அவருடைய இந்த காயத்திற்கான விடயத்தில் நாங்கள் எந்தவித ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எதிர்வரும் தொடர்களுக்கு அவர் நிச்சயம் அவசியமான ஒரு முக்கிய வீரர் எனவே அவரை நாளைய போட்டியில் களமிறக்கி அவரது காயத்திற்கான விடயத்தில் ரிஸ்க் எடுத்து மேலும் காயம் தீவிரம் அடைவதை தவிர்த்து அவருக்கு பதிலாக மாற்று வீரரை அணியில் விளையாட வைக்க இருக்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : நாம எல்லோரும் தான் தப்பு செய்ஞ்சி இருக்கோம். அதுக்காக? – ரிஷப் பண்டை ஆதரித்து பேசிய விராட் கோலி

இந்திய அணியில் இன்னும் பலமான வீரர்கள் பெஞ்ச்சில் இருப்பதால் இதில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. நிச்சயம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement