நாம எல்லோரும் தான் தப்பு செய்ஞ்சி இருக்கோம். அதுக்காக? – ரிஷப் பண்டை ஆதரித்து பேசிய விராட் கோலி

pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் அவர் மீது அதிருப்தி அலை எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என எங்கு சென்றாலும் ரன்களைக் குவித்து அசத்தினார். எனவே நிச்சயம் இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் அவரது சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடர் ஆரம்பத்திலிருந்தே தேவையில்லாமல் விக்கெட்டுகளை இழந்து வருகிறார்.

pant

- Advertisement -

அதிலும் குறிப்பாக 2-வது டெஸ்ட் போட்டியின் 2-து இன்னிங்சில் அவர் சந்தித்த மூன்றாவது பந்திலேயே தேவையில்லாமல் இறங்கி வந்து பெரிய ஷாட் ஆட நினைத்து ஆட்டமிழந்து வெளியேறியது பெரிய அளவில் விமர்சனத்தை எழுப்பியது. ஏனெனில் அணி இக்கட்டான வேளையில் சிக்கி தவிக்கும்போது பொறுப்பாக நின்று விளையாடி அணியை பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலையில் அவர் தேவையில்லாமல் ஆட்டமிழந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

மேலும் தொடர்ந்து அவர் சொதப்பலாக விளையாடி வருவதால் அணியிலிருந்து சில போட்டிகளில் நீக்கப்பட்டு அவருக்கு வாய்ப்பு வழங்காமல் ஓய்வு கொடுத்து பின்னர் மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : நாம் அனைவருமே நம்முடைய கரியரில் சில தவறுகளை செய்திருப்போம். அதை போன்று ரிஷப் பண்டும் சில தவறுகளை செய்துள்ளார் அதை ஏற்றுக்கொள்வது தான் நமக்கு பெரிதும் உதவும்.

அதை தவிர்த்து நாம் அவருக்கு தண்டனை வழங்குவது சரியல்ல என்று ரிஷப் பண்ட் குறித்து ஆதரவு அளித்து பேசியுள்ளார் விராட் கோலி. எனவே நிச்சயம் 3-வது டெஸ்ட் போட்டியிலும் ரிஷப் பண்ட் அணியில் இணைந்து விளையாடுவார். இருப்பினும் அவர் இந்த போட்டியில் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம்.

- Advertisement -

இதையும் படிங்க : நாளைய போட்டியில் நான் ஆடுவேன். ஆனா இவர் ஆடமாட்டார் – 3 ஆவது போட்டிக்கு முன்பாக கோலி பேட்டி

ஏனெனில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதல் முறையாக அவர்களது மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற ஒரு பெரிய வாய்ப்பு இருப்பதால் நிச்சயம் இந்தப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement