நாளைய போட்டியில் நான் ஆடுவேன். ஆனா இவர் ஆடமாட்டார் – 3 ஆவது போட்டிக்கு முன்பாக கோலி பேட்டி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளதால் நாளை 11-ஆம் தேதி கேப்டவுனில் துவங்க இருக்கும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும். இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்பதன் காரணமாக இம்முறை மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டடுள்ளது.

INDvsRSA

- Advertisement -

அதற்கேற்றார்போல் இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடி வருவதால் நிச்சயம் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்ற வேளையில் இரண்டாவது போட்டியின்போது கேப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக இடம் பெறவில்லை.

இந்த போட்டியில் விராத் கோலிக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியை வழி நடத்தினார். இந்த போட்டியின் போது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நாளை துவங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அவர் இந்திய அணிக்கு திரும்புகிறார். அதற்கு முன்னர் தற்போது செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பல்வேறு தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

Siraj-1

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் நாளைய போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு முழு உடல் தகுதியுடன் உள்ளேன். எனவே நிச்சயம் நான் நாளைய டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடுவேன். அதேபோன்று அணியில் மற்றொரு மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் நாளை இடம்பெற மாட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : ராகுல் டிராவிடின் மிகப்பெரிய சாதனையை 3 ஆவது போட்டியில் முறியடிக்க காத்திருக்கும் – விராட் கோலி

அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருவதால் நாளைய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முகமது சிராஜ்-க்கு பதிலாக இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்கலாம் என்று தெரிகிறது.

Advertisement