விராட் கோலி ஓய்வு பெறும் முடிவை முதலில் யாரிடம் சொன்னார் தெரியுமா! – பின்னணியில் நடந்தது என்ன?

Kohli
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி திடீரென அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை புரட்டிப் போட்டுள்ளது என்றே கூறலாம். கடந்த 2014 ஆம் ஆண்டு மோசமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய இந்திய அணியில் பல அதிரடியான மாற்றங்களை செய்த அவர் அதன் பின் 5 வருடங்களாக தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக இந்தியாவை ஜொலிக்க வைத்துள்ளார். மொத்தம் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை இந்தியாவுக்காக பெற்றுத் தந்துள்ள அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

மகத்தான கேப்டன்:
அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை குவித்த ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி தன் வசமாக்கி உள்ளார். மொத்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா கண்ட ஒரு மகத்தான கேப்டன் விராட் கோலி என்றால் மிகையாகாது.

சர்ச்சை காரணமா :
இருப்பினும் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால் உலகக் கோப்பையை வாங்கித் தரவில்லை என்ற காரணத்தால் அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை வலுக்கட்டாயமாக பறித்த பிசிசிஐ அதை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

kohli

யாரிடம் சொன்னார் தெரியுமா:
அத்துடன் ஏற்கனவே பேட்டிங்கில் பணிச்சுமை காரணமாக சதம் அடிக்க முடியாமல் திணறி வரும் விராட் கோலி வெள்ளை பந்து கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் இனி சுதந்திரமாக பேட்டிங் செய்வதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் வரை கேப்டனாக செயல்படுவார் என அனைவரும் நினைத்தனர்.

- Advertisement -

ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வண்ணமாக தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இந்த முடிவை முதன் முதலில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் வசம் விராட் கோலி தெரிவித்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

Dravid

ராகுல் டிராவிட்:
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. அதற்க்கு அடுத்த நாள் அதாவது நேற்றய சனிக்கிழமை அன்று ராகுல் டிராவிட் அறைக்கு சென்ற விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக முதல் முறையாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதை தொடர்ந்து அன்றைய நாளின் மதிய வேளையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா’வை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விராட் கோலி அவரிடம் இந்த முடிவை தெரிவித்ததாக தெரிகிறது. அந்த முடிவால் அதிர்ச்சியடைந்த ஜெய் ஷா வேறு வழியின்றி சம்மதம் தெரிவிக்க இறுதியில் இந்த முடிவை இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் அனைவரிடமும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஷாக் சம்பவம்! மே.இ தீவுகளை சொந்த மண்ணில் வீழ்த்திய கத்துக்குட்டி அயர்லாந்து – வரலாற்று சாதனை

அதன்பின் நேற்று மாலை தனது டுவிட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த முடிவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் விராட் கோலி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement