ஷாக் சம்பவம்! மே.இ தீவுகளை சொந்த மண்ணில் வீழ்த்திய கத்துக்குட்டி அயர்லாந்து – வரலாற்று சாதனை

IRE
- Advertisement -

வெஸ்ட் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிராக 3 கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வந்தது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி அன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 1 – 0 என தொடரில் முன்னிலை பெற்றது. இதை அடுத்து கடந்த ஜனவரி 13ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து வெஸ்ட்இண்டீஸ்க்கு அதிர்ச்சி கொடுத்து தொடரை 1 – 1 என சமன் செய்தது.

wivsire

3வது போட்டி :
இதை தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி இன்று ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தது. இதை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை அயர்லாந்து பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி ரன்களை வழங்காமல் ஆரம்பம் முதலே கட்டுக்குள் வைத்திருந்தார்கள். அந்த அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 39 பந்துகளில் அதிரடியாக 53 ரன்கள் எடுத்த போதிலும் அடுத்து வந்த வீரர்கள் யாரும் 20 ரன்களை கூட தாண்டாமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

- Advertisement -

சுருண்ட வெஸ்ட்இண்டீஸ்:
இதனால் 99/5 என திண்டாடிய வெஸ்ட் இண்டீசை ஹோல்டர் 44 ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். இறுதியில் 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 212 ரன்களுக்கு சுருண்டது. அயர்லாந்து சார்பில் அபாரமாக பந்துவீசிய ஆண்டி மெக்பிரிண் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ire

இதை அடுத்து 213 என்ற இலக்கை துரத்திய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் வில்லியம் போர்ட்டர்பீல்ட் டக் அவுட்டாகி ஏமாற்றினார். ஆனால் அடுத்து வந்த பால் ஸ்டெர்லிங் 44 ரன்கள், ஆண்டி மெக்பிரின் 59 ரன்கள், ஹேரி ஹெக்டர் 52 ரன்கள் எடுக்க 44.5 ஓவர்களில் தட்டுத்தடுமாறி 8 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து 214 ரன்களைக் குவித்து வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

ஷாக் கொடுத்த அயர்லாந்து :
இதன் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற “கத்துக்குட்டியான அயர்லாந்து வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து ஷாக்” கொடுத்தது. இந்த வெற்றியின் வாயிலாக ஒரு கத்துக்குட்டியான அயர்லாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஐசிசியின் முழு அந்தஸ்து பெற்ற ஒரு அணிக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் முதல் முறையாக ஒரு ஒருநாள் தொடரை வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

IRE-1

மோசமான நாள்:
இந்த சரித்திர வெற்றிக்கு வித்திட்ட அயர்லாந்து வீரர் ஆன்டி மெக்பிரின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

இதையும் படிங்க : ஒட்டுமொத்த ஐ.பி.எல் போட்டிகளையும் 3 மைதானத்தில் நடத்த முடிவு – பி.சி.சி.ஐ போட்டுள்ள பிளான்

இந்த மோசமான தோல்வி பற்றி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கைரன் பொலார்ட் பேசுகையில், “இது வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட்டில் ஒரு மோசமான நாள். களத்தில் நான் உட்பட நாங்கள் அனைவரும் மோசமாக விளையாடிதால் தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

Advertisement