ஒட்டுமொத்த ஐ.பி.எல் போட்டிகளையும் 3 மைதானத்தில் நடத்த முடிவு – பி.சி.சி.ஐ போட்டுள்ள பிளான்

Jay-shah
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது 14 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து 15 ஆவது ஐபிஎல் தொடரானது எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் புதிய இரண்டு அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. அதன்படி இந்த ஐ.பி.எல் தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

IPL
IPL Cup

இந்நிலையில் இந்தியாவில் பெருகிவரும் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் தற்போது நாள் ஒன்றுக்கு தொற்று பரவும் வீதம் அதிகரித்து வருவதால் போட்டிகளை சரியாக நடத்த முடியுமா? என்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

- Advertisement -

கடந்த முறை போன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்தலாம் என்ற வழி இருந்தாலும் வெளிநாடுகளில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ விரும்பவில்லை. இதன் காரணமாக இந்தியாவிலேயே நடத்தும் முயற்சியை தற்போது பி.சி.சி.ஐ ஆலோசித்து வருகிறது.

அந்த வகையில் மும்பையில் உள்ள மூன்று மைதானங்களில் மட்டும் வைத்து அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிக்க தற்போது ஒரு திட்டத்தை அவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அது உறுதி செய்யப்படும் பட்சத்தில் இந்தியாவிலேயே ஐபிஎல் தொடர் முழுவதுமாக மும்பை நகரில் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : பதவி விலகும் நாளுக்கு முன்னர் இந்திய அணி வீரர்களை அழைத்து மீட்டிங் போட்ட விராட் கோலி – நடந்தது என்ன?

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விரைவில் இதற்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல் மெகா ஏலமும் பிப்ரவரி இரண்டாவது வாரம் நடைபெற இருக்கிறது.

Advertisement