இந்த ஒரு விஷயத்தை நான் மாத்திக்க மாட்டேன். அப்படி நடந்தா நான் விளையாடமாட்டேன் – கோலி அதிரடி

Kohli
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி இந்த டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தான் இந்த தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று நடைபெற்ற நமீபியா அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டிக்கு பிறகு அவர் முறைப்படி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். நேற்றைய போட்டி விராட் கோலிக்கு கேப்டனாக கடைசி போட்டி என்பதால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

indvsnam

- Advertisement -

அதன்படி பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று நடைபெற்ற நமீபியா அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து பேசிய அவர் : அழுத்தத்தில் இருந்து விடுபட்டு தற்போது மிகவும் இலகுவாக உணர்கிறேன். கடந்த 6-7 வருடங்களாக பணிச்சுமை காரணமாக அழுத்தங்களை சந்தித்தேன்.

இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை என்றாலும் வீரர்கள் அனைவரும் சிறப்பாகவே விளையாடினார்கள் என்று பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் தனது ஆக்ரோஷ குணம் பற்றிய முக்கியமான கருத்தினை பகிர்ந்து கொண்டார். களத்தில் எப்போதுமே வெற்றி தோல்வி என்பதை தாண்டி மிகவும் துடிப்பாக போராடும் ஆக்ரோஷ குணத்தை கொண்டவர் கோலி என்பது நாம் அறிந்ததே.

jadeja 1

எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது ஆக்ரோஷத்தை கைவிடாமல் இறுதிவரை நிற்கக் கூடியவர் விராட்கோலி. இந்நிலையில் தனது ஆக்ரோஷம் குறித்து பேசிய அவர் : நான் என்னுடைய ஆக்ரோஷத்தை எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டேன். அப்படி ஒருவேளை நான் மாற்ற வேண்டிய வேலை வரும் எனில் நான் அப்போது கிரிக்கெட்டை விட்டு விடுவேன் என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்ட ரோஹித் சர்மா – குவியும் வாழ்த்துக்கள்

மேலும் நான் கேப்டன் ஆவதற்கு முன்பும் சரி இதே போன்று தான் ஆக்ரோஷமாக இருந்தேன். தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் நான் எனது அணிக்கு ஏதாவது ஒரு வழியில் பங்காற்ற உதவுவேன் என கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement