விராட் கோலியை தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்ட ரோஹித் சர்மா – குவியும் வாழ்த்துக்கள்

Rohith
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் கடைசி போட்டியில் நேற்று விளையாடிய இந்திய அணியானது நமீபியா அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்தது.

sky

- Advertisement -

இந்திய அணி சார்பாக அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அணியின் எண்ணிக்கை 86 ஆக இருந்தபோது பத்தாவது ஓவரின் கடைசி பந்தில் 56 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் 54 ரன்களும், சூரியகுமார் யாதவ் 25 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணியானது 15.2 போர்களில் 136 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

rohith 1

இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் ஒரு மிக முக்கியமான சாதனை நிகழ்த்தியுள்ளார். அதன்படி மூன்றாவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோஹித் சர்மா அதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை பூர்த்தி செய்து அசத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : கேப்டனாக தனது கடைசி போட்டியில் விளையாடிய கோலி போட்டி முடிந்து பேசியது என்ன ? – முழுவிவரம் இதோ

கடந்த 2007ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டிற்கு அறிமுகமாக ரோகித் சர்மா இதுவரை 116 போட்டிகளில் விளையாடி 3038 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் விராட் கோலி 3227 ரன்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியை சேர்ந்த மார்டின் கப்தில் 3115 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement