- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மைதானத்தின் வெளியில் நின்று கூச்சலிட்ட சிறுவர்கள். கோலி கொடுத்த சர்ப்ரைஸ் – சிறுவர்கள் மகிழ்ச்சி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் தவித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது சதம் விளாசிய கோலி அதனைத் தொடர்ந்து தனது 71-வது சதத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார். இந்நிலையில் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவ்வேளையில் இந்த டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொண்ட விராட் கோலி மீண்டும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைந்துள்ளார்.

அதன்படி வருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி முதல் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் விராட் கோலி தனது 100-வது டெஸ்டில் விளையாடுகிறார். இதன் காரணமாக முன்கூட்டியே அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் விராட் கோலி நிச்சயம் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது மொஹாலியில் உள்ள மைதானத்தில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வரும் விராத் கோலி தற்போதே ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார். அதுமட்டுமின்றி விராட்கோலி பயிற்சியில் ஈடுபடுவதை அறிந்த ரசிகர்கள் மைதானத்தின் வெளியில் நின்று விராட்கோலி குறித்த வாழ்த்துக்களையும் எழுப்பி வருகின்றனர்.

டி20 தொடரில் ஓய்வில் இருந்த விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷமி, அஸ்வின் ஆகியோரும் டெஸ்ட் வீரர்களான உமேஷ் யாதவ், ஜெயந்த் யாதவ், ஹனுமா விஹாரி மற்றும் சுப்மன் கில் ஆகியோரும் விராட் கோலியுடன் இணைந்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மொஹாலி மைதானத்திற்கு முன்பாக விராத் கோலியின் இளம் வயது ரசிகர்கள் பலர் மைதானத்தில் வெளியில் நின்று விராட்கோலி பயிற்சியில் ஈடுபடும் போது சத்தமாக கூச்சலிட்டு உள்ளனர்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக மைதானத்தின் வெளியிலிருந்து கூச்சல் அதிகரிக்கவே விராட் கோலி பாதுகாவலரே அழைத்து அது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது பாதுகாவலரும் சிறுவயது ரசிகர்கள் உங்களது ஆட்டோகிராஃப் வேண்டுமென்றே கூச்சல் இடுகிறார்கள்.கொரோனா பாதுகாப்பு வளையம் காரணமாக நீங்கள் யாரையும் சந்திக்க கூடாது என்று அந்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இதன் காரணமாக விராட் கோலி உடனே அந்த காவல் அதிகாரியிடம் நீங்கள் சென்று அந்த சிறுவர்களிடம் இருந்து டிசர்ட்டை மட்டும் வாங்கி வாருங்கள் நான் அவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்குகிறேன் என்று அனைத்து டீசர்ட்களையும் வாங்கி கையெழுத்து போட்டு மீண்டும் சிறுவர்களிடம் கொடுக்கும்படி கொடுத்து அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : நல்லா தான் கேப்டன்ஷிப் பண்றீங்க. ஆனா நீங்க பண்ணும் தப்பு உங்களுக்கு தெரியுதா? – சபா கரீம் கேள்வி

இதனை சற்றும் எதிர்பாராத அந்த ரசிகர்கள் கோலியிடமிருந்து எங்களுக்கு இப்படி ஆட்டோகிராஃப் கிடைக்கும் என்று நாங்கள் வாழ்நாளில் நினைக்கவில்லை என்று பூரிப்புடன் மைதானத்தில் இருந்து மகிழ்ச்சியாக விடைபெற்று சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by