3 ஆவது டெஸ்ட் : டாஸிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி – பேசியது என்ன?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸிற்கு பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.

kohli

- Advertisement -

அதன்பிறகு இந்த போட்டி குறித்து அவர் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து அவர் கூறுகையில் : நமது மன ஓட்டங்களில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் இந்த குறிப்பிட்ட மைதானத்தில் இந்திய அணிக்கு நிறைய ரன்கள் வந்துள்ளன. நான் இந்த போட்டியில் விளையாடுவதற்கு முழுத் தகுதியுடன் உள்ளேன்.

கடந்த போட்டியில் எனக்கு பதிலாக விளையாடிய விஹாரி அணியில் இருந்து வெளியேறுகிறார். அவருக்கு பதிலாக இந்த போட்டியில் நான் விளையாடுகிறேன். அதேபோன்று கடந்த போட்டியில் காயமடைந்த சிராஜ் இந்த போட்டியில் இருந்து வெளியேறுகிறார். அவருக்கு பதிலாக அணியில் உமேஷ் யாதவ் விளையாடுகிறார்.

Ashwin

இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கடினம் என்றாலும் தற்போதுள்ள நிலையில் தாங்கள் உமேஷ் யாதவை தேர்வு செய்துள்ளோம். வெளிநாட்டில் எப்போதும் டெஸ்ட் விளையாடும் போது நமது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 3ஆவது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங். பிளேயிங் லெவனில் 2 மாற்றம் – முழு லிஸ்ட் இதோ

அந்த வகையில் இந்த மைதானத்தில் நமது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement