3ஆவது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங். பிளேயிங் லெவனில் 2 மாற்றம் – முழு லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுன் நகரில் சில நிமிடங்களுக்கு முன்னர் துவங்கியது. டாஸ் போடப்பட்ட பிறகு டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாட தயாராகி வருகிறது. இந்நிலையில் டாஸிற்கு பிறகு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.

INDvsRSA

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் சில மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முக்கிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. அதாவது சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். அதேபோன்று தொடர்ச்சியாக சொதப்பலாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் அணியில் நீடிக்கிறார். இருப்பினும் இன்றைய போட்டியில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

அதன்படி கடந்த போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக விளையாடிய விஹாரி இன்றைய போட்டியில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மீண்டும் விராட் கோலி தற்போது அணியில் இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 2-வது போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த சிராஜ் இந்த மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அணியின் சீனியர் வீரரான உமேஷ் யாதவ் இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.

umesh

ஏற்கனவே தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை என்கின்ற மோசமான சாதனையை இம்முறை இந்திய அணி தகர்க்கும் என்று பலராலும் பேசப்பட்டு வரும் வேளையில் அதற்கு முக்கியமான போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலைப் வகிப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டி துவங்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – இது தெரியுமா உங்களுக்கு?

1) கே.எல் ராகுல், 2) மாயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) ரிஷப் பண்ட், 7) ஷர்துல் தாகூர், 8) அஷ்வின், 9) பும்ரா, 10) முகமது ஷமி, 11) உமேஷ் யாதவ்

Advertisement