நேற்றைய போட்டியில் சச்சின் மற்றும் பாண்டிங் சாதனையை சேர்த்து காலி செய்த விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று துவங்கியது. தென்ஆப்பிரிக்காவின் பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் தென்ஆப்பிரிக்க அணியில் மார்கோ யான்சென் ஆகியோர் இந்த போட்டியில் அறிமுக வீரர்களாக விளையாடினார்கள்.

INDvsRSA toss

- Advertisement -

அபார பார்ட்னர்ஷிப்:
இதை அடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்கள் டீ காக் 27 ரன்களிலும் ஜானெமன் மாலன் 6 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க அடுத்து வந்த மார்க்ரம் 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஆனால் பின் ஜோடி சேர்ந்த கேப்டன் தெம்பா பவுமா – ராசி வேன்டர் டுஷன் ஆகியோர் சரிவில் இருந்த தென்ஆப்பிரிக்காவை நிதானத்துடன் மீட்டார்கள் என்றே கூறலாம்.

ஏனெனில் ஆரம்பத்தில் நிதானத்துடன் விளையாடி பின்னர் அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடியை அவுட்டாக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். இறுதியில் 4வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் சதமடித்த கேப்டன் பவுமா 110 ரன்களில் அவுட்டானர்.

Bavuma

சுமாரான பவுலிங்:
பவுமா அவுட் ஆனாலும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த வேன்டர் டுஷன் 96 பந்துகளில் 129* ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததால் 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா 296/4 ரன்களை குவித்தது. இப்போட்டியில் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசிய இந்தியா அதன்பின் சுமாராக பந்துவீசியதால் தென்ஆப்பிரிக்கா இவ்வளவு பெரிய ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

இதை அடுத்து 297 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு கேப்டன் ராகுல் 12 ரன்களில் ஏமாற்றினார். ஆனால் அடுத்த ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் பொறுப்புடன் பேட்டிங் செய்து 2வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினார்கள்.

kohli 1

சொதப்பல் பேட்டிங்:
இதில் ஷிகர் தவான் 79 ரன்களும் விராட் கோலி 51 ரன்களும் எடுத்து முக்கிய வேளையில் அவுட் ஆனபோது இந்தியா வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் அடுத்து வந்த ரிஷப் பண்ட் 16, ஷ்ரேயஸ் ஐயர் 17, வெங்கடேஷ் ஐயர் 2 என மிடில் ஆர்டர் வீரர்கள் பொறுப்பில்லாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

- Advertisement -

இறுதியில் ஷார்துல் தாகூர் 50* ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடிய போதிலும் அவருக்கு எந்த இந்திய வீரரும் ஆதரவு கொடுக்காததால் எதிர்பார்த்தது போலவே 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 1 – 0 என தொடரில் தென்ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

Kohli

மனதை தேற்றிய கோலி :
கேஎல் ராகுல் தலைமையில் முதல் முறையாக விளையாடிய இந்தபோட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் சோகத்துடன் காணப்படுகிறார்கள். இருப்பினும் இப்போட்டியில் 51 ரன்கள் குவித்த விராட் கோலி ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் முக்கிய சாதனையை முறியடித்துள்ளார்.

- Advertisement -

அதாவது இந்த போட்டியில் 51 ரன்கள் குவித்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

kohli 1

ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் இதோ:
1. குமார் சங்கக்காரா : 5518 ரன்கள் (149 போட்டிகள்)
2. விராட் கோலி : 5108* ரன்கள் (108 போட்டிகள்)
3. ரிக்கி பாண்டிங் : 5090 ரன்கள் (132 போட்டிகள்)

இது மட்டுமல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : இனிமேல் தான் வேற லெவல் விராட் கோலிய பாக்க போறீங்க ! விராட் கோலிக்கு – தெ.ஆ ஜாம்பவான் ஆதரவு

ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் இதோ :
1. விராட் கோலி : 5108* ரன்கள் (108 போட்டிகள்)
2. சச்சின் டெண்டுல்கர் : 5065 ரன்கள் (147 போட்டிகள்)
3. எம்எஸ் தோனி : 4520 ரன்கள் (145 போட்டிகள்)

Advertisement