இனிமேல் தான் வேற லெவல் விராட் கோலிய பாக்க போறீங்க ! விராட் கோலிக்கு – தெ.ஆ ஜாம்பவான் ஆதரவு

Kohli
- Advertisement -

கடந்த 2017 முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான இந்திய கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார். சச்சினுக்கு அடுத்து இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்படும் அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பும் கூட ஏராளமான ரன்களை குவித்து சாதனைகளை படைத்து வந்தார். ஆனால் கடைசியாக தனது 70 தாவது சதத்தை கடந்த 2019ஆம் ஆண்டு அடித்த அவர் அதன்பின் கடந்த 2 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் 71வது சதத்தை அடிக்க முடியாமல் மோசமான பார்மில் இருந்து வந்தார்.

kohli 1

- Advertisement -

கேப்டன்ஷிப் சர்ச்சை:
3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக அதிகப்படியான கவனத்தைச் செலுத்தியது தமது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உணர்ந்த விராட் கோலி கடந்த 2021 டி20 உலகக்கோப்பையுடன் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியாத காரணத்தால் அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ பறித்தது. அதில் ஏற்பட்ட விரக்தி காரணமாகவே வெற்றிகரமான கேப்டனாக இருந்த போதிலும் டெஸ்ட் கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்துள்ளார் என நம்பப்படுகிறது.

பேட்டிங் சுதந்திரம்:
தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு சாதாரண வீரராக சுதந்திரமாக செயல்பட உள்ளார். இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து மொத்தமாக விராட் கோலி விலகியது நல்ல முடிவு என தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,

Steyn

“தற்போது அவருக்கு இளமையான குடும்பம் உள்ளது ஆனால் ஒரு கட்டத்தில் குடும்பத்தைத் தவிர வேறு எதுவும் பெரிதாக தெரியாது. விராட் கோலி தற்போது கேப்டன்சிப் பதவியிலிருந்து விலகியுள்ளதால் இனி அவரால் அவரின் குடும்பத்தின் மீதும் தனது பேட்டியின் மீதும் முழு கவனத்தைச் செலுத்த முடியும்” என கூறிய ஸ்டைன் இனி விராட் கோலி கேப்டன்ஷிப் பற்றிய கவனம் மற்றும் கவலை எதுவும் இல்லாமல் தனது பேட்டிங் மீது மட்டும் 100% கவனத்தை செலுத்த முடியும் என தெரிவித்தார்.

- Advertisement -

வேற லெவல் கோலி:
“சொல்லப்போனால் இனிமேல்தான் முன்பை விட சிறந்த விராட் கோலியை நீங்கள் பார்க்க முடியும். அவரின் பெரும்பாலான கிரிக்கெட் வாழ்நாளில் தனி மனிதராகவும் கேப்டனாகவும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தார். ஆனால் தற்போது பல புதிய அம்சங்கள் அவரின் வாழ்வில் வந்து விட்டது. கடந்த 2 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க முடியாமல் இருந்து வரும் அவரை இந்த முடிவு சுதந்திரமாக செயல்பட வைக்கும்”

இதையும் படிங்க : ப்ளீஸ் அவரை மட்டும் டெஸ்ட் கேப்டனா போடாதீங்க. வேலைக்கே ஆக மாட்டார் – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

என இது பற்றி மேலும் தெரிவித்த டேல் ஸ்டைன் இனிமேல்தான் எந்தவித கவலையும் இல்லாமல் தமது பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி விராட் கோலி ரன் மழை பொழிவார் என கூறியுள்ளார். அத்துடன் கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வரும் மோசமான கதைக்கு விரைவில் அவர் முற்றுப்புள்ளி வைப்பார் எனவும் ஸ்டைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement