ப்ளீஸ் அவரை மட்டும் டெஸ்ட் கேப்டனா போடாதீங்க. வேலைக்கே ஆக மாட்டார் – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரின் கேப்டன்ஷிப் கடும் விமர்சனங்களை சந்தித்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேப்டன்ஷிப் பலரின் பாராட்டுகளையும் பெற்று வந்தது. ஏனெனில் கடந்த 2014 முதல் தற்போது வரை 7 வருடங்கள் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக இருந்த அவர் அதில் தொடர்ந்து 5 வருடங்கள் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர செய்தார்.

kohli

- Advertisement -

வெற்றிகரமான கேப்டன்:
68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார். 70 வருடங்களில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் வெற்றி இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகள் என மற்ற யாராலும் நிரப்ப முடியாத டெஸ்ட் கேப்டன்ஷிப் இடத்தை விராட் கோலி காலியாக விட்டுச் சென்றுள்ளார். அப்படிப்பட்ட அவரின் இடத்தில் அடுத்த இந்திய டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா அல்லது கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ரோஹித் வேண்டாம்:
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டாமென முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், “உடல்தகுதி ரோஹித் சர்மாவிடம் உள்ள ஒரு பிரச்சனையாகும், எனவே அனைத்து போட்டிகளிலும் இந்தியாவிற்காக விளையாடக்கூடிய ஒருவர் தான் கேப்டனாக தேவை. இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் கேப்டனாக இருந்தபோது உடல் தகுதி இல்லாமல் இருந்தார்.

Rohith

அதுபோன்ற சமயங்களில் வேகமாக ஓட நினைக்கும் போதோ அல்லது விரைவான சிங்கிள் எடுக்க நினைக்கும் போதோ காயம் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் நீங்கள் வேறொரு கேப்டனை நியமிக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும். எனவே அடிக்கடி காயமடையாத ஒரு இளம் வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் ஆனால் ரோகித் சர்மா விஷயத்தில் அவர் அவ்வப்போது காயமடைவது எனக்கு சந்தேகத்தை கொடுக்கிறது.

- Advertisement -

மேலும் இதன் காரணமாகத்தான் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் ஒருவரையே கேப்டனாக நியமிக்க வேண்டும் என நான் கருதுகிறேன்” என சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். அவர் கூறுவது போல ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கும் போதிலும் விராட் கோலி அளவுக்கு அவரிடம் உடல் தகுதி இல்லாத காரணத்தால் அவ்வப்போது காயம் அடைந்து வருகிறார். தற்போது கூட காயம் அடைந்த காரணத்தால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை.

Pant

அத்துடன் இளம் வீரராக இருக்கும் ரிஷப் பண்ட்டை இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வேண்டுமென ஏற்கனவே சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

தரமான கேப்டன்:
“கேப்டனாக பொறுப்பேற்றது முதல் இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு நல்ல அணி கிடைத்தது, ஒருவருக்கு நல்ல அணி கிடைத்தால் போட்டியின் முடிவுகளும் நல்லபடியாக அமையும். கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை பாருங்கள், அவரது அணியில் 4 தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல பேட்டர்களும் இருந்தனர்.

இதையும் படிங்க : பிக் பேஷ் லீக்கில் எரிமலையாய் வெடித்த கிளென் மேக்ஸ்வெல்! மெகா சதம் விளாசி – வரலாற்று சாதனை

அதுபோன்றவர்கள் அணியில் இருந்தால் போட்டியில் வெற்றி பெறுவது எளிதாகும். ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியை பாருங்கள்” என இதுபற்றி மேலும் தெரிவித்த சுனில் கவாஸ்கர் விராட் கோலி ஒரு வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விளங்க அவருக்கு ஒரு மிகச் சிறந்த அணி கிடைத்ததாக கூறியுள்ளார்.

Advertisement