பிக் பேஷ் லீக்கில் எரிமலையாய் வெடித்த கிளென் மேக்ஸ்வெல்! மெகா சதம் விளாசி – வரலாற்று சாதனை

Maxwell
- Advertisement -

ஐபிஎல் டி20 பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் போல ஆஸ்திரேலியாவில் கடந்த 2011 முதல் ஒவ்வொரு வருடமும் பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற இந்த கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் லீக் சுற்று, நாக்அவுட் சுற்று உட்பட 61 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

எரிமலையாய் மேக்ஸ்வெல்:
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் இந்த கிரிக்கெட் தொடரில் இன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 55வது லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோபார்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய மெல்போர்ன் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் ஆரம்பம் முதலே தனக்கே உரித்தான பாணியில் அதிரடியாக பேட்டிங் செய்து ஹோபார்ட் பந்துவீச்சாளர்களை கதற விட்டார் என்றே கூறலாம். இவருக்கு கம்பெனி கொடுத்த மற்றொரு ஓப்பனிங் வீரர் ஜோ கிளார்க் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து 35 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

maxwell 1

வெடித்த மேக்ஸ்வெல்:
அடுத்து வந்த லார்கின் 3 ரன்களில் நடையைக் கட்ட பின்னர் மேக்ஸ்வெல் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் தன் பங்கிற்கு எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை பந்தாடினார். ஹோபார்ட் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாத இந்த ஜோடியில் ஆரம்பம் முதலே எரிமலையாய் வெடித்த கிளென் மேக்ஸ்வெல் வெறும் 64 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் 4 இமாலய சிக்சர்கள் உட்பட சதம் விளாசி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 154* ரன்களை 240.63 என்ற மிரட்டும் ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசினார்.

- Advertisement -

இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய மார்க்கஸ் ஸ்டோனிஸ் தன் பங்கிற்கு 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உட்பட 75* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மொத்தத்தில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மெல்போர்ன் அணியைச் சேர்ந்த இந்த 2 வீரர்களும் ரன் மழை பொழிந்தால் 20 ஓவர்களில் மெல்போர்ன் அணி 273/2 ரன்களை குவித்து மிரட்டியது.

maxwell 2

வரலாற்று சாதனை
இந்த போட்டியில் 154* ரன்கள் விளாசிய கிளன் மேக்ஸ்வெல் கடந்த 2011 முதல் நடைபெற்று வரும் பிக் பேஷ் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வீரர் என்ற புதிய சரித்திரம் படைத்தார்.

- Advertisement -

பிக் பேஷ் லீக் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரர்கள் இதோ :
கிளென் மேக்ஸ்வெல் – 154*, ஹோபார்ட் அணிக்கு எதிராக, 2022*.
மார்கஸ் ஸ்டோனிஸ் – 147*, சிட்னி அணிக்கு எதிராக, 2020.
130* – மேத்தியூ வேட், சிட்னி அணிக்கு எதிராக, 2020.

maxwell 3

அதேபோல் இந்த இந்த போட்டியில் 273/2 ரன்களை குவித்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பிக் பேஷ் லீக் வரலாற்றில் முதல் முறையாக 250 ரன்களை கடந்த அணி என்ற சாதனை படைத்தது. அத்துடன் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை படைத்தது. இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 2வது அணி என்ற புதிய வரலாற்றையும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி படைத்துள்ளது.

- Advertisement -

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகள் இதோ:
278/3 – ஆப்கானிஸ்தான், அயர்லாந்துக்கு எதிராக, 2019.
278/4 – குடியரசு சீசெக், துருக்கி அணிக்கு எதிராக, 2019.
273/2 – மெல்போர்ன் ஸ்டார்ஸ், ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிராக, 2022*.

இதையும் படிங்க : நம்ப முடியுமா உங்களால்! 925 நாட்கள் கழித்து முதல் முறையாக விக்கெட் எடுத்த பும்ரா – எப்படி தெரியுமா ?

பெங்களூரு ரசிகர்கள் ஹேப்பி :
வரும் ஏப்ரல் மாதம் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொடரில் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள மேக்ஸ்வெல் இந்த அளவுக்கு அதிரடியாக விளையாடியுள்ளதால் இது பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement