நம்ப முடியுமா உங்களால்! 925 நாட்கள் கழித்து முதல் முறையாக விக்கெட் எடுத்த பும்ரா – எப்படி தெரியுமா ?

Bumrah
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் நகரில் இருக்கும் போலண்ட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் மார்கோ யான்சென் மற்றும் இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் முதல் முறையாக இப்போட்டியின் வாயிலாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்கள்.

INDvsRSA toss

- Advertisement -

அசத்திய பும்ரா:
ஒருநாள் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் தலைமையில் முதல் முறையாக இந்த போட்டியில் விளையாடிய இந்தியா ஆரம்பத்தில் துல்லியமாக பந்துவீச தொடங்கியது. குறிப்பாக இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆரம்பத்திலேயே அபாரமாக பந்துவீச தொடங்கினார்.குறிப்பாக பவர்ப்ளெயின் 4வது ஒவேரிலேயே தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் ஜானேமான் மாலனை வெறும் 6 ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா அவுட் ஆக்கினார்.

925 நாட்கள்:
இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 925 நாட்களுக்கு பின் முதல் முறையாக பவர்பிளே ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டை எடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அந்த அணியின் மார்ட்டின் கப்டிலை பவர்பிளே ஓவர்களில் பும்ரா அவுட் செய்து இருந்தார்.

bumrah 1

அதன்பின் கிட்டத்தட்ட கடந்த 3 வருடங்களாக அவ்வப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அவர் 233 பந்துகளை வீசி 177 ரன்களை கொடுத்த போதிலும் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை என்பது இந்திய ரசிகர்கள் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. தற்போது அந்த மோசமான புள்ளிவிவர த்துக்கு பும்ரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்கா அபாரம்:
இதனால் 68/3 என தடுமாறிய தென்னாபிரிக்காவை அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமா மற்றும் ராசி வேண் டேர் டுஷன் ஆகியோர் இணைந்து காப்பாற்றினார்கள். முதலில் பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி நேரம் செல்லச்செல்ல அதிரடியாக இந்திய பந்துவீச்சாளர்களை பந்தாடி 4வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.

Bavuma

மேலும் “இந்த 204 ரன்கள் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த 2வது தென்னாப்பிரிக்க ஜோடி” என்ற சாதனையையும் இவர்கள் படைத்தனர்.

- Advertisement -

சொதப்பிய இந்திய பவுலர்கள்:
இந்த ஜோடியில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா 8 பவுண்டரிகள் உட்பட சதமடித்து 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த வேண்டர்டுசைன் வெறும் 96 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட சதமடித்து 129* ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக அசத்தலான சாதனையை நிகழ்த்திய பவுமா – வேண்டர் டுசைன் ஜோடி – என்ன தெரியுமா?

இதனால் ஒரு கட்டத்தில் 250 ரன்களை தாண்டுமா என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 296/4 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் அபாரமாக பந்துவீசிய போதிலும் அதன்பின் மோசமாக பந்துவீசிய இந்தியா தற்போது 297 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வருகிறது.

Advertisement