இந்திய அணிக்கு எதிராக அசத்தலான சாதனையை நிகழ்த்திய பவுமா – வேண்டர் டுசைன் ஜோடி – என்ன தெரியுமா?

vander dussen
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று மதியம் இரண்டு மணியளவில் போலந்து பார்க் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆபிரிக்க அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் விக்கெட்டை 19 ரன்களில் இழந்தது.

INDvsRSA toss

- Advertisement -

அதனைத் தொடர்ந்து அணியின் ஸ்கோர் 58 ரன்களில் இருந்தபோது 27 ரன்கள் எடுத்த நிலையில் டிகாக் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் மார்க்ரம் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேற தென் ஆப்பிரிக்க அணியானது 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிக்கலை சந்தித்தது. அதன் பிறகு எப்படி இந்த சரிவிலிருந்து தென்னாப்பிரிக்க அணி மீண்டெழுந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் பவுமா மற்றும் வேண்டர்டுசைன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியானது தொடர்ச்சியாக இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து ரன்களை சேர்த்தது. குறிப்பாக வேண்டர்டுசைன் பவுண்டரிகளாக அடித்து விளாசினார். 68 ரன்களுக்கு ஜோடி சேர்ந்த இந்த கூட்டணி இறுதியில் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 272 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 296 ரன்கள் குவித்தது.

bavuma 1

சிறப்பாக விளையாடிய பவுமா 110 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வேண்டர்டுசைன் 96 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்சர்கள் என 129 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பவுமா மற்றும் வேண்டர்டுசைன் ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக அசத்தலான சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளனர்.

- Advertisement -

அதன்படி இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் 4-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனை பட்டியலில் தற்போது இவர்கள் இருவரும் இரண்டாவது இடம் பிடித்துள்ளனர். முதல் இடத்தில் சோயப் மாலிக் மற்றும் யூசப் பதான் ஆகியோரது ஜோடி 2009ஆம் ஆண்டு 206 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 204 ரன்கள் அடித்து இந்த பட்டியலில் இந்த 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படிங்க : என்னையா கேப்டன் நீ? முதல் போட்டியிலேயே கே.எல் ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

அதேபோன்று இந்திய அணிக்கு எதிராக அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக கடந்த 2000 ஆம் ஆவது ஆண்டு கிப்ஸ் மற்றும் கேரி க்ரிஸ்டன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து 2 ஆவது இடத்தில் தற்போது பவுமா மற்றும் வேண்டர்டுசைன் ஜோடி 204 ரன்கள் குவித்து 2 ஆவது இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement