என்னையா கேப்டன் நீ? முதல் போட்டியிலேயே கே.எல் ராகுலை விமர்சிக்கும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

Rahul-toss
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து இருப்பதால் தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணி அளவில் போலந்து பார்க் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதல் முறையாக இந்திய அணி கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கியது.

Bavuma

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியானது 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் குவித்தது. குயின்டன் டிகாக் 27 ரன்களிலும், மலான் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற 58 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது மார்க்ரமும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற தென்னாப்பிரிக்க அணியானது 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பவுமா மற்றும் வேன்டர்டுசைன் ஆகியோரது ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக விளையாடிய பவுமா 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேவேளையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வேன்டர்டுசைன் 96 பந்துகளில் 129 ரன்களை குவித்து அசத்தினார். இதன் காரணமாக தற்போது இந்திய அணிக்கு 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

venkatesh 1

இந்நிலையில் இந்த போட்டியில் முதல் முறையாக கேப்டன்சி செய்யும் ராகுலை இந்திய அணியின் ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் ஆல்-ரவுண்டராக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் அவருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை இது ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதையும் படிங்க : நல்லா விளையாடுன வீரரை தூக்கி ஓரங்கட்டுன கே.எல் ராகுல் – 3 போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காதாம்

வழக்கமாக அணியில் இடம்பெற்றிருந்த 5 பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய போதும் அவரை ஏன் பயன்படுத்தவே இல்லை. அப்போது எதற்கு அவரை ஆல்ரவுண்டர் என அணியில் சேர்த்தீர்கள் என ராகுலை விமர்சித்து இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement