நல்லா விளையாடுன வீரரை தூக்கி ஓரங்கட்டுன கே.எல் ராகுல் – 3 போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காதாம்

Bhuvi
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று மதியம் 2 மணி அளவில் போலந்து பார்க் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியும், தெம்பா பாவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியும் மோதி வருகின்றன. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது தற்போது ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.

INDvsRSA toss

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அறிமுக வீரராக வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவரது வருகை இந்திய அணிக்கு பலம் என்றாலும் முக்கிய வீரர் ஒருவர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான ஆட்டம் மூலமாக தொடர்ச்சியாக இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்று விளையாடி வந்த வேளையில் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்த ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பெற்றதன் காரணமாக சூர்யகுமார் யாதவை வெளியேற்றி ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேஎல் ராகுல் வாய்ப்பளித்துள்ளார். மேலும் தற்போது ரோஹித்தும் காயமடைந்து வெளியேறி உள்ளதன் காரணமாக ராகுல் மற்றும் தவான் தொடக்க வீரர்களாக விளையாடுகின்றனர்.

sky

இந்நிலையில் இந்த தொடரில் முதல் இந்த மூன்று போட்டிகளிலுமே சூர்யகுமார் யாதவ் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. ஏனெனில் துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் தவான் ஆகியோர் விளையாடும் வேளையில் 3-வது வீரராக கோலியும், 4-வது வீரராக ஷ்ரேயாஸ் ஐயரும் விளையாடுவார்கள். அதேபோன்று ரிஷப் பண்ட் 5வது இடத்திலும், ஆறாவது இடத்தில் ஆல்-ரவுண்டராக வெங்கடேஷ் ஐயரும் விளையாடுகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : சேவாக் தலைமையில் யுவி, பதான் போன்ற ஜாம்பவான்கள் விளையாடும் போட்டி. எப்போது – எந்த சேனலில் பார்க்கலாம்

இதன்காரணமாக சூர்யகுமார் யாதவ் இந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. திறமையான வீரர்கள் இந்திய அணியில் இருந்தாலும் வெகு சிலருக்கே வாய்ப்பு கிடைக்கும் வேண்டும் என்பதனால் மற்ற வீரர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement