சேவாக் தலைமையில் யுவி, பதான் போன்ற ஜாம்பவான்கள் விளையாடும் போட்டி. எப்போது – எந்த சேனலில் பார்க்கலாம்

Sehwag
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அபாரமாக செயல்பட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற உள்ளது. “லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்” என்ற பெயரில் நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் தொடர் ஜனவரி 20ஆம் தேதி முதல் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் நகரில் நடக்க உள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங்,சோயப் அக்தர், முத்தையா முரளிதரன், சாகித் அப்ரிடி, பிரட் லி என உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற உள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

rsw

- Advertisement -

3 அணிகள்:
இந்த சிறப்பு வாய்ந்த தொடரில் இந்திய மகாராஜாஸ், ஆசிய லயன்ஸ், உலக ஜெய்ன்ட்ஸ் என 3 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் இந்திய மகாராஜாஸ் அணிக்கு வீரேந்திர சேவாக் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த அணியில் தமிழகத்திலிருந்து சுப்ரமணியம் பத்ரிநாத் மற்றும் ஹேமங் பதானி ஆகிய முன்னாள் வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்த தொடரில் பங்கேற்கும் 3 அணிகளில் விளையாடும் ஜாம்பவான் வீரர்களின் பட்டியல் இதோ:
1. இந்திய மஹாராஜாஸ் :
விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், சுப்பிரமணியம் பத்ரிநாத், ஆர்பி சிங், பிரக்கியன் ஓஜா, நமன் ஓஜா, மன்ப்ரீட் கோணி, ஹெமங் பதாணி, வேணுகோபால் ராவ், முனாப் படேல், சஞ்சய் பங்கர், நயன் மோங்கியா, அமித் பண்டாரி.

rsw1

2. ஆசிய லயன்ஸ் : சோயிப் அக்தர், ஷாஹித் அப்ரிடி, சனாத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், கம்ரான் அக்மல், சமிந்தா வாஸ், ரொமேஸ் கழுவித்ரனா, டிலகராதனே டில்ஷான், அசார் மஹ்மூத், உபுல் தரங்கா, மிஸ்பா-உல்-ஹக், முகமத் ஹபீஸ், சோயிப் மாலிக், முகமத் யூசுப், உமர் குல், அஸ்கர் ஆப்கான்.

- Advertisement -

3. வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ்: டேரன் சம்மி, டேனியல் வெட்டோரி, பிரட் லீ, ஜாண்ட்டி ரோட்ஸ், கெவின் பீட்டர்சன், இம்ரான் தாஹிர், ஓவைஸ் ஷா, ஹெர்ஸ்செல் கிப்ஸ், அல்பி மோர்கெல், மோர்னே மோர்கெல், கோரி ஆண்டர்சன், மான்டி பனேசர், பிராட் ஹாட்டின், கெவின் ஓபிரின் ப்ரெண்டன் டெய்லர்.

rsw 2

இந்த கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணை இதோ:
ஜனவரி 20: இந்திய மஹாராஜாஸ் vs ஆசிய லயன்ஸ்
ஜனவரி 21: வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் vs ஆசிய லயன்ஸ்
ஜனவரி 22: வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் vs இந்திய மஹாராஜாஸ்
ஜனவரி 24: ஆசிய லயன்ஸ் vs இந்திய மஹாராஜாஸ்
ஜனவரி 26: இந்திய மஹாராஜாஸ் vs வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ்
ஜனவரி 27: ஆசிய லயன்ஸ் vs வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ்.
ஜனவரி 29: பைனல்

- Advertisement -

இந்த தொடரின் லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

rsw 3

எதில் பார்க்கலாம்:
இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ஜாம்பவான்களும் சங்கமிக்கும் இந்த மகத்தான கிரிக்கெட் தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் சோனி டென் 1 மற்றும் சோனி டென் 3 ஆகிய தொலைக்காட்சி சேனல்களில் நேரடியாக கண்டு களிக்கலாம்.

இதையும் படிங்க : இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி சதமடிப்பது உறுதி. அதை யாராலும் தடுக்கமுடியாது – தெ.ஆ வீரர் பேட்டி

அதேபோல சோனி லிவ் மொபைல் ஆப் வாயிலாகவும் இந்த கிரிக்கெட் போட்டிகளை இந்திய ரசிகர்கள் நேரடியாக கண்டு களிக்கலாம்.

Advertisement