இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி சதமடிப்பது உறுதி. அதை யாராலும் தடுக்கமுடியாது – தெ.ஆ வீரர் பேட்டி

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முன்னாள் கேப்டன் விராட் கோலி முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவதன் காரணமாக தற்போது அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் இல்லாமல் தவித்து வருகிறார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதம் விளாசியுள்ள விராட் கோலி தனது 71-வது சதத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார்.

Kohli-2

- Advertisement -

கடைசியாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற விராட் கோலி 558 ரன்களை குவித்தார். அந்த தொடரில் அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இன்று துவங்கி நடைபெற்று வரும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நிச்சயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசுவார் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கல் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி நிச்சயம் இந்த தொடரில் செஞ்சுரி விளாசுவார் ஏனெனில் ஆப்பிரிக்காவில் உள்ள இரண்டு மைதானங்களில் விராட் கோலியின் பேட்டிங் அற்புதமாக இருக்கும். அந்த வகையில் கேப்டவுன் மைதானம் அவருக்கு மிகவும் பிடித்த மைதானம் அதுமட்டுமின்றி முதல் இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ள போலந்து பார்க் மைதானத்திலும் அவர் சிறப்பாக விளையாடக் கூடியவர்.

morkel 1

தென் ஆப்பிரிக்க மைதானங்களில் அவர் சதம் அடிக்காமல் விளையாடியதை நான் பார்த்ததில்லை. எனவே நிச்சயம் இந்த தொடரில் அவர் சதம் அடிப்பார் என்றும் அதுமட்டுமின்றி இந்த தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெறும் என்றும் மோர்னே மோர்கல் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : மறுபடியும் ஆரம்பிச்சாச்சா? அட்டவணை வெளியானதும் கேன்சலான ஆஸி – நியூசி தொடர் – காரணம் என்ன?

நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த பின்னர் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய விராட் கோலி தற்போது மூன்று வகை கிரிக்கெட்டிலும் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட உள்ளதால் அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த இருக்கிறார் என்றும் இனி அவர் விளையாட போகும் இன்னின்ஸ்கள் அனைத்தும் அதிரடியாக இருக்கும் என்று மோர்னே மோர்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement