மறுபடியும் ஆரம்பிச்சாச்சா? அட்டவணை வெளியானதும் கேன்சலான ஆஸி – நியூசி தொடர் – காரணம் என்ன?

AUSvsNZ
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய ஆஸ்திரேலியா அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் கலந்துகொள்ள விளையாட இருந்தது. இந்த தொடருக்கான அட்டவணை எல்லாம் வெளியாகி அதன் பின்னர் தற்போது இந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

finch

- Advertisement -

நியூசிலாந்து அணி வருகிற 24-ஆம் தேதி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட திட்டமிட்டிருந்தது. அதன்படி முதல் ஒருநாள் போட்டியானது 30-ஆம் தேதி பெர்த் நகரிலும், 2வது ஒருநாள் போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி ஹோபார்ட்டிலும் நடைபெற இருந்தது.

அதனைத்தொடர்ந்து கடைசி ஒருநாள் போட்டி 5-ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று ஒரே ஒரு டி20 போட்டியானது பிப்ரவரி 8-ஆம் தேதி கான்பெர்ராவிலும் நடைபெறும் என்று முழு அட்டவணையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் பரவி வரும் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி நடத்த முடியாது என்பதனால் இந்த தொடரை அவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.

aus

மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒரு சேர முடிவெடுத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த தொடரானது ஒத்திவைக்கப்பட்டு இருந்தாலும் எப்போது மீண்டும் நடக்கும் என்பதை அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளாகவே அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது 2022 ஆம் ஆண்டிலும் மீண்டும் ஒரு தொடரை ஒத்திவைக்கும் அளவிற்கு தனது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி எப்படா வெளிய போவார்னு அவங்க 2 பேரும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க – முன்னாள் பாக் கேப்டன்

அதுமட்டுமின்றி இலங்கை அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்பது பின்னர்தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement