சதம் அடிக்கலான என்ன! சங்காவை சமன் செய்து ஜெயவர்தானேவை முந்தி புதிய சாதனை படைத்த கோலி

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி அந்த பதவியிலிருந்து மொத்தமாக விலகி தற்போது ஒரு சாதாரண வீரராக விளையாடி வருகிறார். பொதுவாகவே எதிரணிகளை பந்தாடி ரன்களை குவிப்பதில் வல்லவராக திகழ்ந்த அவர் இதுவரை 70 சதங்கள் விளாசி ஏற்கனவே தன்னை ஒரு ஜாம்பவான் என நிரூபித்துள்ளார். கடந்த 2019க்கு பின் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வரும் அவர் தனது பணிச்சுமைய குறைத்து கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வண்ணம் ஐபிஎல் உட்பட படிப்படியாக அனைத்து கேப்டன் பொறுப்புகளிலிருந்தும் விடுபட்டுள்ளார்.

Kohli

- Advertisement -

71வது சதம் எப்போது:
இனிமேல் எந்தவித பணிச்சுமையும் இல்லாத காரணத்தால் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த உள்ள அவர் கேப்டனாக அல்லாமல் ஒரு சாதாரண வீரராக விளையாட துவங்கி விட்டார். சமீபத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கடந்த 2016க்கு பின் முதல் முறையாக கேஎல் ராகுல் தலைமையில் சாதாரண வீரராக பேட்டிங் செய்தார்.

அதில் முதல் போட்டியில் 51 ரன்கள் எடுத்த அவர் 2வது போட்டியில் டக் அவுட்டானாலும் 3வது போட்டியில் 65 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய போதிலும் மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் காரணமாக இந்தியா பரிதாப தோல்வி அடைந்தது.

Kohli

சதம் அடிக்கலைனாலும் சாதனை:
தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் கேப்டனாக விலகியதால் விராட் கோலி சதம் அடிப்பார் என பலரும் எதிர்பார்த்த வேளையில் அவர் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்தார். இதனால் அவர் இன்னும் முழுமையான பார்முக்கு திரும்பி சதம் அடிக்கவில்லையே என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிவருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் சதம் அடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது அரை சதங்கள் அடித்து வரும் அவர் இலங்கையின் ஜாம்பவான் மகிளா ஜெயவர்த்தனேவை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

kohli 1

புதிய சாதனை:
அதாவது தென்ஆப்ரிக்க தொடரில் 2 அரை சதங்களை அடித்த விராட் கோலி “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை 50 க்கும் மேற்பட்ட ரன்கள்” அடித்த 6வது வீரர் என்ற ஜெயவர்த்தனேவின் சாதனையை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:
1. சச்சின் டெண்டுல்கர் : 264 (782 இன்னிங்ஸ்)
2. ரிக்கி பாண்டிங் : 217 (668 இன்னிங்ஸ்)
3. குமார் சங்கக்காரா : 216 (666 இன்னிங்ஸ்)
4. ஜேக் காலிஸ் : 211 (617 இன்னிங்ஸ்)
5. ராகுல் டிராவிட் : 194 (605 இன்னிங்ஸ்)
6. விராட் கோலி : 191* (503 இன்னிங்ஸ்)
7. மகிளா ஜெயவர்தனே : 190 (725 இன்னிங்ஸ்)

kohli 1

சங்கக்காரா சாதனை சமன்:
இது மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் அடித்த ஆசிய வீரர் என்ற இலங்கையின் ஜாம்பவான் குமார் சங்கக்காராவின் சாதனையையும் விராட் கோலி சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் கடைசி 16 ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 10 அரை சதங்கள் அடித்துள்ளார். அவரின் கடைசி 16 ஒருநாள் போட்டி ரன்கள் இதோ : 65, 0, 51, 7, 66, 56, 63, 89, 21, 9, 15, 51, 89, 78, 16, 85.

இதையும் படிங்க : ரன்கள் அடிக்க தவறிய 2 சீனியர் வீரர்களின் சம்பளத்தில் கைவைக்க போகும் பிசிசிஐ – சரியான முடிவு

இதிலிருந்தே அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் கூட படுமோசமான பார்மில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே விரைவில் அவர் சதம் அடிப்பார் என நம்பலாம்.

Advertisement