ரன்கள் அடிக்க தவறிய 2 சீனியர் வீரர்களின் சம்பளத்தில் கைவைக்க போகும் பிசிசிஐ – சரியான முடிவு

IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2022/23 சீசனில் விளையாடப்போகும் வீரர்களுக்கான சம்பளம் பற்றிய முழு ஒப்பந்த விவரங்கள் மற்றும் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. இதில் கடந்த வருடம் இந்தியாவுக்காக மிகச் சிறப்பாக செயல்பட தவறிய வீரர்களின் சம்பளத்தை குறைக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக கடந்த 2 வருடங்களாக ரன்கள் குவிக்க திணறி வரும் செட்டேஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோரின் சம்பளம் குறைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

IND

- Advertisement -

கைவைக்கும் பிசிசிஐ:
கடந்த 2021ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியாவின் முன்னாள் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே மற்றும் நட்சத்திர வீரர் புஜாரா ஆகியோர் தலா 5 கோடி ரூபாய் சம்பளத்துக்கு கிரேட் ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஏற்கனவே டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வரும் இவர்கள் கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் இருந்து வருகிறார்கள்.

குறிப்பாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் மோசமாக விளையாடியதன் காரணமாக அந்த தொடரை இழந்த இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தையும் நழுவ விட்டது.

Rahane

சம்பளம் குறைப்பு:
அந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் இருந்த போதிலும் முழு வாய்ப்பு பெற்ற இந்த அனுபவ வீரர்களில் புஜாரா 124 ரன்களும் ரகானே 136 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் காரணமாக புதிய ஒப்பந்தத்தில் கிரேட் ஏ பிரிவில் இருந்து கிரேட் பி பிரிவுக்கு இவர்கள் மாற்றம் செய்யப்பட்டு ரூபாய் 3 கோடிகள் மட்டுமே சம்பளமாக வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

- Advertisement -

வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்கள் நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

pujara

ஹர்டிக் பாண்டியா, இஷாந்த் சர்மா:
சமீப காலமாக காயத்தால் இந்திய அணியில் இடம்பிடிக்க தடுமாறி வரும் ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா ஆகியோர் கிரேட் ஏ பிரிவிலிருந்து கிரேட் பி பிரிவிற்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. அத்துடன் இந்த ஒப்பந்த பட்டியலிலிருந்து இந்திய வீரர் உமேஷ் யாதவ் மொத்தமாக கழட்டி விடப்பட உள்ளார் என்றும் தெரிய வருகிறது.

- Advertisement -

ப்ரோமோஷன் :
கடந்த வருடத்தில் அபாரமாக செயல்பட்ட ஷார்துல் தாகூர் கிரேட் பி பிரிவிலிருந்து ஏ பிரிவுக்கு மாற வாய்ப்புள்ளது. இவர் போலவே கடந்த வருடத்தில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ், சுப்மன் கில், ஹனுமா விஹாரி ஆகியோர் சி பிரிவிலிருந்து பி பிரிவுக்கு மாற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : இனிமேல் விராட் கோலி கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் இதுதான் – ஷேன் வார்னே ஓபன்டாக்

மேலும் கடந்த சில வருடங்களாகவே அபாரமாக செயல்பட்டு 3 வகையான இந்திய கிரிக்கெட்டிலும் நிலையான இடத்தை பிடித்துள்ள ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் கிரேட் ஏ பிரிவில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் வகிக்கும் அதிகபட்ச சம்பள பிரிவான ஏ பிளஸ் பிரிவுக்கு மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வருகிறது. இருப்பினும் அவர்கள் ஏ ப்ளஸ் பிரிவுக்கு மாறுவார்களா இல்லையா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement