இனிமேல் விராட் கோலி கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் இதுதான் – ஷேன் வார்னே ஓபன்டாக்

Warne
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவியிலிருந்து விலகுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தது அனைவரையும் அதிரச் செய்தது. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அவர் தலைமையில் சரித்திர வெற்றிகளை பெற்ற இந்தியா ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. கேப்டனாக கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது 7வது இடத்தில் இருந்த இந்தியாவை 2016 முதல் தொடர்ந்து உலகின் நம்பர்-1 டெஸ்ட் அணியாக தரம் உயர்த்திய பெருமையும் அவரையே சேரும்.

kohli

- Advertisement -

பணிச்சுமை:
மொத்தம் 68 போட்டிகளில் இந்தியாவிற்காக கேப்டனாக செயல்பட்ட அவர் 40 வெற்றிகளுடன் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் கடந்த 2019 முதல் ஒரு சதம் அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.

கேப்டன்ஷிப் பணிச்சுமை தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் முதலில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக பின்னர் அவரின் ஒருநாள் கேப்டன் பதவியும் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. அதன்பின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ள அவர் தற்போது இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

Kohli

ரன்மழை வேண்டும்:
இனி அவருக்கு பேட்டிங் தவிர வேறு எந்த பணிச்சுமையும் இல்லாததால் அவரால் இனி சுதந்திரமாக விளையாட முடியும். எனவே கடந்த 2 வருடங்களாக வராமல் அடம் பிடிக்கும் 71வது சதத்தை எப்போது அடிப்பார் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள விராட் கோலி இனி ரன் மழை பொழிவதை பார்க்க விரும்புவதாக ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “அனைவரையும் போல நானும் ஆச்சரியமடைந்தேன். விராட் கோலி இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் ஆனால் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களிடம் அவரிடையே நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. இந்தியாவுக்காக ஒருவர் மிக நீண்ட நாட்கள் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்து கொண்டு மிகச்சிறப்பாக பேட்டிங் செய்வது என்பது சுலபம் என எனக்கு தோன்றவில்லை.

Kohli-1

எனவே கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள விராட் கோலி மீண்டும் அபாரமாக பேட்டிங் செய்து ரன் மழை பொழிந்து தன்னை உலகின் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மென் என நிரூபிக்க இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். இனி அவர் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்கள் அடிப்பார் என நம்புகிறேன். எப்போதுமே இந்தியா மிகச்சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியது, அது இனியும் தொடரும் என நம்புகிறேன்”

- Advertisement -

என தெரிவித்துள்ள ஷேன் வார்னே இந்தியா போன்ற நாட்டில் நீண்ட காலமாக சிறப்பாக கேப்டன்ஷிப் செய்துகொண்டு ரன்களை அடிப்பது என்பது ஒருவருக்கு கடினமான காரியம் என கூறியுள்ளார். ஆனால் இனிமேல் எந்த வித சுமையும் இன்றி விராட் கோலி சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Kohli-2

எதிர்பார்ப்பு ஏராளம்:
“அவரிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஐபிஎல் தொடரிலும் விளையாடிக்கொண்டு இந்தியாவிற்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். கேப்டன் பொறுப்பை வேறு ஒருவரிடம் கொடுங்கள். விராட் கோலியை உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளையாட வழிவகை செய்யுங்கள். அந்த தருணத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்”

- Advertisement -

என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள வார்னே கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகியது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது எனவும் ஆனால் அது சரியான முடிவுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : நான் பாத்ததுலேயே ஷார்ப்பான கிரிக்கெட் மூளை இவரிடம் தான் உள்ளது – கிரேக் சேப்பல் புகழாரம்

கேப்டனாக விராட் கோலி விலகிய பின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 2 அரை சதங்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement