நான் பாத்ததுலேயே ஷார்ப்பான கிரிக்கெட் மூளை இவரிடம் தான் உள்ளது – கிரேக் சேப்பல் புகழாரம்

Greg-Chappell
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி இந்தியாவிற்காக 3 வகையான உலக கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் ஆவார். அத்துடன் கடந்த 2010 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் கொண்டு வந்தவர். அபாரமான கேப்டன்ஷிப், அதிரடியான பினிஷிங், மின்னல்வேக ஸ்டம்பிங், சரிந்தால் மிடில் ஆர்டரில் தாங்கிப்பிடிக்க கூடியவர் என பல பரிணாமங்களை கொண்ட எம்.எஸ் தோனி இந்திய கிரிக்கெட்டில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய தலைவனாக தனது சுவடுகளை பதித்து சென்றுள்ளார்.

Dhoni

- Advertisement -

தரமான இந்திய அணி:
இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் 90-களில் உலகையே மிரட்டும் அணிகளாக வலம் வந்த நிலையில் 2015இல் அந்த அணியில் இடம் வகித்த ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு நிகரான தரமான வீரர்களை கண்டறிய முடியாமல் இன்றும் தவிர்த்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கேப்டனாக உலக கோப்பையை வென்ற தோனி ஒரு கட்டத்திற்குப்பின் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு மூத்த வீரர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளித்தார். இதன் காரணமாக கடும் விமர்சனங்களை சந்தித்த போதிலும் இன்று விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா என பல தரமான வீரர்களை உருவாக்கி கொடுத்து இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை ஜொலிக்கும் அளவுக்கு பட்டை தீட்டிய பெருமை தோனிக்கு கண்டிப்பாக உள்ளது.

Dhoni

வித்யாசமான தோனி:
எப்போதும் மற்ற கேப்டன்களை போல அல்லாமல் வித்தியாசமாக சிந்தித்து யாரும் எதிர்பாராத நேரத்தில் வித்தியாசமான முடிவுகளை எடுப்பதில் எம்எஸ் தோனி வல்லவர். குறிப்பாக 2007 டி20 உலக கோப்பை பைனலில் கடைசி ஓவரை ஹர்பஜன் சிங்கிற்கு வழங்க வேண்டும் என பலரும் கூறினார்கள். ஆனால் அனுபவம் இல்லாமல் கேப்டனாக இருந்த அவர் வித்தியாசமாக முடிவெடுத்து ஜோகிந்தர் சர்மாவிடம் வழங்க இறுதியில் இந்தியா உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

ஐபிஎல் 2010 பைனலில் யாராலும் யோசிக்க முடியாத அளவுக்கு பேட்ஸ்மேனுக்கு நேராக பவுண்டரி எல்லையில் ஒரு பீல்டரை நிற்கவைத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கைரன் பொல்லார்ட் விக்கெட்டை எடுத்து கோப்பையை வென்றது தோனியின் கேப்டன்ஷிப்க்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இப்படி தோனி பற்றி பல வித்தியாசமான அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

Dhoni

கூர்மையான மூளை:
இந்நிலையில் என் வாழ்நாளில் பார்த்ததிலேயே எம்எஸ் தோனி ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் பாராட்டியுள்ளார். இதுபற்றி இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் அவர், “தனக்கு தானே பாடங்களை கற்றுக் கொண்டு தனக்குத்தானே திறமைகளை வளர்த்து கொண்ட ஒரு பேட்டருக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியாவில் நான் வேலை செய்த போது என்னுடன் பணிபுரிந்த எம்எஸ் தோனி ஆவார்.

- Advertisement -

அவரின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் தன்னை விட அனுபவம் கொண்டவர்களிடம் போட்டி போட்டார். முடிவுகளை எடுப்பதிலும் யுத்திகளை கையாள்வதிலும் இருக்கும் தோனியின் திறமையானது அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக காட்டுகிறது. நான் பார்த்ததில்லையே எம்எஸ் தோனி மிகவும் கூர்மையான மூளையை கொண்டவர்” என கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

dhoni

தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் அதிகப்படியான குழப்பங்கள் நிறைந்த பயிற்சிகளை பயிற்சியாளர்கள் வழங்குகிறார்கள். ஆனால் எப்போதுமே கிரிக்கெட் வீரர்கள் அவர்கள் செய்யும் சொந்த தவறிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அதில் முன்னேற்றமடைந்து விளையாடினால் மட்டுமே உண்மையான வெற்றி பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு எம்எஸ் தோனி முதல் முறையாக அப்போதைய பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலின் கீழ் இந்திய கிரிக்கெட்டில் காலடி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறந்த இந்தியா:
அது போன்ற ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவர் தான் எம்எஸ் தோனி எனவும் அதனால்தான் அவர் மற்றவர்களை விட சிறந்தவராக இருக்கிறார் என கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். இன்றும் கூட இந்தியாவில் பல பெரு நகரங்களிலும் சிறு நகரங்களிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலையில் பல இளைஞர்கள் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டு அதன் வாயிலாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி பின்னர் இந்தியாவுக்காக விளையாடுவதன் காரணமாகவே இந்தியா இந்த அளவுக்கு உலக கிரிக்கெட் அரங்கில் ஜொலிப்பதற்கான அடிப்படைக் காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : களத்திற்கு உள்ளே நாங்கள் சண்டைக்கோழி தான். ஆனா களத்திற்கு வெளியே? – ரிஸ்வான் பேட்டி

ஆனால் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் இளைஞர்கள் அடிப்படை வசதிகள் அல்லது அடிப்படை விதிமுறைகள் கொண்ட கிரிக்கெட்டை ஆரம்பத்திலேயே பழகுவதால் அவர்களுக்குள் உள்ள இயற்கையான திறமைகள் வெளிப்படாமல் போய்விடுவதாகவும் அதன் காரணமாகவே இங்கிலாந்து பேட்டிங் அவ்வப்போது சொதப்புகிறது எனவும் கிரேக் சேப்பல் கூறியுள்ளார். அதாவது வளரும் இளம் கிரிக்கெட் அடிப்படை வசதிகள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றை தாண்டி தங்களுக்கு தாங்களே விளையாடி பாடங்களை கற்றுக் கொண்டால் மட்டுமே எதிர்கால கிரிக்கெட்டில் உண்மையாக ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார்.

Advertisement