களத்திற்கு உள்ளே நாங்கள் சண்டைக்கோழி தான். ஆனா களத்திற்கு வெளியே? – ரிஸ்வான் பேட்டி

Rizwan-2
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துவக்க வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் கடந்த 2021-ஆம் ஆண்டில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது சர்வதேச கிரிக்கெட் கரியரில் முதலில் பின்வரிசையில் விளையாடி வந்த முகமது ரிஸ்வான் துவக்க வீரராக மாற்றப்பட்ட பின் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Rizwan

- Advertisement -

கடந்த ஆண்டு அதிக ரன்களை குவித்த டி20 வீரர் என்ற பெருமையை பெற்ற ரிஸ்வான் ஐசிசி வழங்கிய சிறந்த டி20 வீரருக்கான விருதையும் வென்றிருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த அவர் முதல் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த ஒரு முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

இந்நிலையில் இந்திய அணி உடனான உறவு குறித்து தற்போது பேசியுள்ள அவர் கூறுகையில் : இந்திய அணியாக இருந்தாலும் சரி, வேறு எந்தவொரு அணியாக இருந்தாலும் சரி களத்தில் உள்ளே எந்த ஒரு அணியாக இருந்தாலும் அந்த அணியை வீழ்த்துவது தான் எங்கள் இலக்கு. ஆனால் அதுவே களத்திற்கு வெளியே எங்களுடைய அன்பும் மரியாதையும் எப்போதும் இந்திய அணிக்கு உள்ளது.

Rizwan 1

போட்டி நடைபெறும் போது மைதானத்திற்குள் எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பது, முறைத்து பார்ப்பது மற்றும் உரக்கப் பேசுவது என எல்லாம் போட்டியின் ஒரு யுக்தி தான். அதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. மற்றபடி ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அணி வீரர்களிடம் நாங்கள் மிகவும் அன்பாக பழகுவோம்.

- Advertisement -

இதையும் படிங்க : அஷ்வினை டீம்ல இருந்து தூக்கிட்டு மீண்டும் அவங்க 2 பேரையும் கொண்டு வாங்க – ஹர்பஜன் சிங் வயிற்றெரிச்சல்

அதிலும் குறிப்பாக தோனி, கோலி மாதிரியான வீரர்களிடம் நாங்கள் பேசுவது எங்களுடைய அன்பின் வெளிப்பாடுதான் என்று இந்திய வீரர்கள் உடனான உறவு குறித்து முஹம்மது ரிஸ்வான் கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement