அஷ்வினை டீம்ல இருந்து தூக்கிட்டு மீண்டும் அவங்க 2 பேரையும் கொண்டு வாங்க – ஹர்பஜன் சிங் வயிற்றெரிச்சல்

Harbhajan
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் தற்போதைய தேதியில் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக அவர் ஜொலிக்கிறார். கடந்த 2011 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த அவர் கடந்த 2017ஆம் ஆண்டில் வெறும் ஒரு சில போட்டிகளில் மோசமாக பந்துவீசியதன் காரணமாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக கழற்றி விடப்பட்டார் என்றே கூறலாம்.

ashwin 1

கம் பேக் கொடுத்த அஸ்வின்:
இதனால் அவரின் வெள்ளை பந்து கிரிக்கெட் கேரியர் முடிந்துவிட்டதாக பல கிரிக்கெட் ரசிகர்களும் வல்லுநர்களும் கருதினார்கள். ஆனால் அதற்கெல்லாம் மனம் தளராத அஸ்வின் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு தேர்வு குழுவினரின் கதவை தட்டிக்கொண்டே இருந்ததால் 4 வருடங்கள் கழித்து கடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

- Advertisement -

அந்த உலக கோப்பையில் ஒரு சில போட்டிகளில் வாய்ப்பு பெற்று அவர் அதில் அபாரமாக செயல்பட்டு பின்னர் கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் இடம் பிடித்து அதிலும் அசத்தினார். அதன் காரணமாக சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விளையாடினார்.

ashwin

கழட்டிவிடுங்க:
இருப்பினும் அந்த தொடரில் அவர் வெற்றிக்கான மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கழட்டிவிடப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினை தாண்டி செல்ல வேண்டிய நேரம் இந்தியாவுக்கு வந்துவிட்டதாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

குல்ச்சா கொண்டுவாங்க:
இது பற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “மிகுந்த மரியாதைக்குரிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சாம்பியன் பவுலர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு பதில் வேறு ஒருவரை இந்தியா பார்க்கும் நேரம் வந்துவிட்டது. அனேகமாக பந்தை உள்ளேயும் வெளியேயும் திருப்பக்கூடிய ஒருவரை அவருக்கு பதில் தேர்வு செய்ய வேண்டும். அந்த இடத்தில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் போன்றவர்களை கொண்டுவரலாம். அதேபோல் துருப்புச்சீட்டாக வருண் சக்கரவர்த்தியையும் பயன்படுத்தலாம்.

Chahal

அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிப்பதில் எந்த தவறும் இல்லை. உலக கோப்பையில் அவருக்கு வெறும் 2 – 3 வாய்ப்புகளை கொடுத்து விட்டு அவர் இனி சரிப்பட்டு வரமாட்டார் என முடிவெடுத்து விட்டார்கள்” என தெரிவித்துள்ள ஹர்பஜன்சிங் ஒருநாள் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதில் வேறு ஒரு நல்ல சுழல்பந்து வீச்சாளரை தேர்வு செய்யும் நேரம் வந்து விட்டதாக கூறினார். அத்துடன் ஏற்கனவே அஷ்வினை கழட்டிவிட்ட பின் இந்திய அணியில் விளையாடிய குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஜோடியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

வயித்தெரிச்சல் :
இதை பார்க்கும் ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கிற்கு எதற்கு இந்த வயிற்று எரிச்சல் என கேள்வி கேட்கிறார்கள். ஏனெனில் கடந்த மாதம் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் “தமக்கு அப்போதைய கேப்டன் தோனி இன்னும் வாய்ப்பளித்திருந்தால் 500 டெஸ்ட் விக்கெட்டுகளுக்கும் மேல் எடுத்து இருப்பேன்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்படிப்பட்ட அவர் அஸ்வினுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் உள்ளது என அவரின் மனசாட்சியையே கேட்டுக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : ஐ.சி.சி வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் – முதலிடத்தில் யார் தெரியுமா?

அத்துடன் அஷ்வின் ஒன்றும் கால்மேல் கால் போட்டுக்கொண்டு 4 வருடங்கள் கழித்து இந்திய வெள்ளை பந்து அணியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து தான் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் அவர் கூறும் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் கடந்த 2 வருடங்களாக மோசமான பார்மில் உள்ளார்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement